(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அப்ப இது உண்மையில்லையா”

  

”இல்லை இதை நம்பி ஏமாந்துடாத கொம்பா” என சொல்ல கொம்பனுக்கு கோபமே வந்தது

  

”சே ஒரு நொடியில இந்த கொம்பனையே ஏமாத்தப்பார்த்தாளே இனி அவள் விசயத்தில நான் ஜாக்கிரதையா இருப்பேன்”

  

”ஆமா இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சொல்ற அப்புறம் கோட்டை விடற”

  

”இந்த முறை பாரு என்னை யாராலயும் ஏமாத்த முடியாது முக்கியமா அவளால”

  

”அதையும் பார்க்கலாம் சரி வா வீட்டு வேலைகள் நிறைய இருக்கு முடிக்கனும்ல”

  

”ம் வரேன்” என சொல்லிவிட்டு அவனுடன் கிளம்பி கீழே வந்தான்.

  

தோப்புக்கு செல்வதற்கு தயாராக இருந்த காவேரியோ கொம்பன் வீராப்பாக வருவதைக்கண்டு முகம் மலர்ந்தாள்.

  

கணக்குபிள்ளையோ சண்முகத்தை தேடிச் செல்ல காவேரியோ கொம்பனை நோக்கி வந்தாள். அவள் வருகிறாள் என பார்த்ததுமே ஒதுங்கி நிற்க அவளோ ஏமாற்றமடைந்தாள் ஆனாலும் அவனை நெருங்கி நிற்க அவனோ

  

”என்ன” என கெத்தாக கேட்க அவளோ

  

”நீ ரொம்ப அழகா இருக்க கொம்பா” என ரகசியமாகச் சொல்ல அவனுக்கு சங்கடமாகிப் போனது

  

அக்கம் பக்கம் பார்த்துவிட்டு விலக போனவனை வம்படியாக கட்டியணைத்தாள். இம்முறை அவனுள் எந்த தாக்கமும் ஏற்படவில்லை மாறாக அவளை தள்ளிவிட்டு

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.