நின்றான்
”என்னாச்சி கொம்பா”
”இதப்பாரு நீ என்னை சீண்டி பார்த்து வெறுப்பேத்தறன்னு நல்லாவே தெரியுது எந்த விசயத்திலயும் இந்த கொம்பன் மாட்டிக்கலை, எப்படியாவது இவனை பழிவாங்கனும் நரகத்தை காட்டனும்னு திட்டம் போட்டு இப்படியெல்லாம் செய்ற, நீ என்ன செய்தாலும் சரி நான் மயங்க மாட்டேன்” என சொல்ல அவளோ ஒரு நொடி குழம்பி பின் தெளிந்து
”ஓ கண்டுபிடிச்சிட்டியா ஆமாம் நரகத்தை காட்டனும்னுதான் இப்படி நடந்துக்கிட்டேன் போதுமா”
”இதுக்கு அப்புறம் கூட இதுபோல நடந்துக்காத”
”அப்படித்தான் செய்வேன் வேணா பாரு” என சொல்லி மீண்டும் அவனை ஒரு நொடி அணைத்துவிட்டு விலகி நின்றாள்
”நீ எத்தனை முறை என்னை கட்டிப்பிடிச்சாலும் சரி நான் மயங்கவே மாட்டேன்”
”அப்படியா”
”ஆமாம் சவாலா”
”சவால்தான் வா” என அழைக்க அவளும் ஒரு முடிவுடன் முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு அவனை கட்டியணைத்துவிட்டு விலகி நின்றாள் அவனோ இளப்பமாக சிரித்தான்
அவளும் விடவில்லை மறுபடியும் கட்டியணைத்துவிட்டு பார்த்தாள் இம்முறையும் அவன் மயங்கவில்லை, மறுபடி மறுபடி என இதையே செய்ய செய்ய நடப்பதை தூரமாக இருந்து பார்த்த சண்முகமும் கணக்குபிள்ளையும் தலையை பிய்த்துக் கொண்டார்கள்