(Reading time: 20 - 40 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்ன அண்ணா சொல்றீங்க”

  

”ஆமாம் காவேரியை காதலிக்கறதும் உன்னை காதலிக்கறதும் ஒண்ணுதானே அதை அவன் பிரிச்சிப் பார்க்கறானா என்ன அர்த்தம் உங்க கல்யாண வாழ்க்கையில விரிசல் வரப்போகுதுன்னு அர்த்தம்”

  

”அண்ணா” என அதிர்ச்சியில் அலற

  

”பொறு பார்ககலாம்”

  

”நான் ஏதோ வேடிக்கைன்னு நினைச்சா வேற மாதிரி கதை ஓடுதே”

  

”நீ கவலைப்படாத இந்த விசயத்தை அப்படியே போய் அவன் அவங்கம்மாகிட்ட சொன்னா ஒத்த ரூபா தரமாட்டாங்க”

  

”ஆனா அவரு தன் பொண்டாட்டியை வெறுக்கறாரு ஆனா முறைப்பொண்ணை விரும்பனும்னு ஆசைப்படறாரு இது எப்படின்னா நியாயம்”

  

”விடும்மா அவன் ஒரு கிறுக்கன், எப்படியும் நான் அவனை தெளிவாக்கறேன் போதுமா” என சொல்ல காவேரிக்கு அப்போதே பயத்தில் உதறல் எடுத்தது.

  

கொம்பனோ ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்துடன் காவேரி முன் வந்து நின்றான் பணத்தைக்கண்டு திகைத்தவள்

  

”கொம்பா இது ஏது“

  

“அம்மா கொடுத்தாங்க”

  

”என்னன்னு சொல்லி இதை வாங்கிட்டு வந்த”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.