”அவளை விடு”
”சரி கோவலன் விட்டுடறேன்” என்றாள்
”நான் என்ன சொன்னாலும் அப்படியே நடந்துக்கற மாதவி, அதனாலயே எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என சொல்ல அவளோ பாவப்பட்ட ஜென்மம் போல தலையாட்டி சிரித்தாள்
”ஒரு நல்ல விசயத்துக்காக நான் ஒரு யோசனை சொன்னேன், அது சரியா வருமான்னு கூட பார்க்காம கத்தினா என்ன அர்த்தம்”
”என்ன விசயம் என்ன யோசனை எனக்கு ஒண்ணும் புரியலையே”
”இப்போ எனக்கொரு காலேஜ் இருக்கு என் பேர்ல இருக்கே உனக்கும் தெரியும்ல”
”ஏன் தெரியாம கோவலன் கலைக்கல்லூரி பார்த்திருக்கேன், தினமும் அந்த வழியாதானே போவேன் வருவேன்”
”அப்படியா சரி சரி அந்த காலேஜ்க்கு புதுசா ஒரு பிரின்சிபால் வந்திருக்கா”
”ஓ பொண்ணா”
”ஆமாம் என் பேச்சுக்கு அவள் ஒத்துப் போறதில்லை, நான் வடக்க நின்னா அவள் தெக்க நிக்கறா”
”புரியலையே”
”சரி நேரா விசயத்துக்கு வரேன், 2 மாசத்துல காலேஜ்ல செமஸ்டர் எக்ஸாம் வருது ஆனா மாணவர்களுக்கு இதுவரைக்கும் ஆசிரியர்கள் பாடம் எடுக்கலை, இதுக்கு அப்புறம் பாடம் எடுத்தா கூட 2 மாசத்துல முடிக்க முடியாது, அதனால நான் என்ன சொன்னேன்