”மூர்த்தியை ஆசைப்பட்டா மட்டும் போதாது, அவன்கூட வாழறதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கவும் தெரியனும், எங்க நீ இப்படி இருக்கியே”
”மாமா இன்னும் தூங்கிக்கிட்டுதானே இருப்பாரு”
”யாரு அவனா சரியா போச்சி, அவன் எப்பவும் விடிகாலையில 5 மணிக்கு எழுந்து வாக்கிங் போயிட்டு வந்து யோகா செய்வான், 7 மணிக்குள்ள முடிச்சிட்டு குளிக்கப் போவான் இது தெரியாதா உனக்கு“
”தெரியாது அத்தை நான் எப்ப வந்தாலும் மாமா ரெடியா இருப்பார்ல”
”ஆமாம் நீ வருவ ஆடி அசைஞ்சி 10 மணிக்கு, சரி சரி போ போய் குளிச்சிட்டு வா” என சத்தம் போட்டுவிட்டு சென்றுவிட ஜானகிக்கு கடுப்பாக இருந்தது
”சே இந்த வீட்ல இருந்தவங்க கூட நான் 9 மணிக்கு எழுந்தா ஒரு கேள்வி கூட கேட்கமாட்டாங்க, இவங்க என்ன இப்படி கத்தறாங்க மூர்த்தி மாமாவுக்காக பொறுத்துக்கறேன்” என சொல்லிக் கொண்டே குளிக்கச் சென்றாள்.
மறுபக்கம் மஹதியோ 5 மணிக்கே எழுந்து விட்டாள், மங்களம் என்ன செய்கிறார் என பார்த்தாள், அவருக்கு நிழல் போல இவளும் இணைந்து அவர் பின்னாலேயே சென்று அவர் செய்யும் வேலைகளுக்கு உதவி செய்துக் கொண்டு வேங்கையனை பற்றி பல விசயங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டு என பிசியாக இருந்தாள்.
வீட்டை வேலையாட்கள் சுத்தம் செய்தாலும் பூஜையறை மட்டும் மங்களமோ அல்லது அந்த வீட்டு மருமகளோதான் சுத்தம் செய்ய வேண்டும், இதை பரம்பரை பரம்பரையாக வழக்கமாக்கி வைத்திருந்தார்கள், இன்று பார்த்து மஹதி பூஜையறையை சுத்தம் செய்ய மங்களம் அனுமதி தர அவள் உற்சாகமாக சுத்தம் செய்தாள்
ஜானகி குளித்து முடித்து வந்ததும்