கட்டியணைத்தாள்.
அவ்வனைத்தும் நடிப்பு என நினைத்து வேங்கையனும் அவளை அணைத்தான், ஆனால் அந்த அணைப்பு அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது, சட்டென அவளை விட்டு விலகி
”அம்மா உன்னை கூப்பிடறாங்க” என சொல்ல அவளோ
”அம்மா பின்னாடிதான் இருக்காங்க, நான் அவங்களை பார்த்துக்கிறேன்” என சொல்லிவிட்டு அவள் மங்களத்தை தேடிச் சென்றாள், அதுவரை நடந்ததை மங்களமும் பார்த்து பூரித்துப் போயிருந்தார், மஹதி வரவும் சிரிப்புடன் அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.
வேங்கையனுக்கு மட்டும் மனதுள் நெருடல் உருவானது கட்டிய மனைவிக்கு துரோகம் இழைக்கிறோமோ என நினைத்து பயந்தான், ஆனாலும் இது வெறும் நடிப்புதானே என நினைத்து தன்னையே ஆறுதல்படுத்திக் கொண்டான்.
மறுபக்கம் ஜானகிக்கு உட்கார நேரமில்லாமல் தொடர்ந்து வேலையே வர அவளும் மூச்சு திணறியபடியே பம்பரமாக வேலை செய்தாள், அதுநாள் வரை வேலை செய்யாமல் ஜாலியாக இருந்தவள் மூர்த்தி தன் வசம் இழுக்க படாதபாடு பட்டாள், ஆனால் அவனோ ஜானகியை ஒரு வேலைக்காரி போல நினைத்தானே தவிர அவனது கவனம் முழுக்க மஹதியின் மீதே நிலைத்திருந்தது.
அப்படியே நாட்கள் சென்றது
இருவாரங்களில் அந்த வீட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள், மஹதி உண்மையிலேயே அந்த வீட்டு சின்ன மருமகளாகவே மாறிப் போனாள், எப்படி மங்களம் ஜானகியை பார்த்துக் கொண்டாரோ அதை விட இரண்டு மடங்கு அதிகமாக மஹதியை பார்த்துக் கொண்டார், அப்படியே அவள் அந்த வீட்டு ராஜகுமாரி போல வலம் வந்தாள், அவளை அழைத்துக் கொண்டு கோயில் குளம் கடைவீதி என அலைந்தார், பார்ப்பவர்களிடம் எல்லாம் மஹதியை தனது சின்ன மருமகள் என சொல்லி பெருமை பீற்றிக் கொண்டார், மஹதி செய்யும் சமையல் ஆகட்டும் அவள் செய்யும் மற்ற செயல்களை அக்கம் பக்கம் வீட்டாரிடமும் சொந்த பந்தங்களிடமும் பெருமையாக சொல்ல அதில் மஹதிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைத்தது, அவளை அனைவரும்