விளையாடலாம்னு பார்த்தா அவள் என்னை ஒருவழியாக்கிட்டா”
”நான்தான் சொன்னேனே அவள் புத்திசாலின்னு அவள்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், முன்னையாவது அடிபட்ட பாம்பு இப்ப அடிப்பட்ட யானை நீ மாட்டின சட்னிதான் நண்பா”
”ஏன்டா பயமுறுத்தற”
”அவள் வீட்லயே அந்த ஆட்டம் ஆடினா இது உன் வீடு, மருமகள்ங்கற உரிமையில வேற வந்திருக்கா, உன் பொண்டாட்டிங்கற அதிகாரத்தை வேற கொடுத்திருக்க இனி அவளோட ஆட்டம் பேயாட்டமாதான் இருக்கும்”
”இப்ப நான் என்ன செய்றது”
”ரொம்ப தாமதம் இனி உன்னால எதுவும் செய்ய முடியாது, நடக்கறதை வைச்சித்தான் ஏதாவது யோசிக்க முடியும்”
”வேணும்னா அவள்கிட்ட போய் மறுபடியும் மன்னிப்பு கேட்கட்டுமா”
”அதை அவள் நம்பமாட்டா, வேணாம், விட்டுப்பிடி எங்க போயிடப்போறா பார்த்துக்கலாம்” என பேச இவ்விருவர் பேசியதையும் மறைந்து நின்று காவேரி ஒரு பக்கமும் கொம்பனின் தாய் தந்தை இன்னொரு பக்கமும் கேட்டு அதிர்ந்தார்கள்.
காவேரியோ
”என்னை கஷ்டப்படுத்தி விளையாடி அதைப்பார்த்து ரசிக்கனும் சந்தோஷப்படனும்னு ஆசையா உனக்கு, இருடி உன்னை வைச்சி நான் எப்படி விளையாடறேன்னு பாரு” என நினைத்தபடியே வீட்டிற்குள் செல்ல வந்தவள் மறுபக்கம் ஒளிந்து நின்று கொம்பனின் பெற்றோர் பேசுவதைக் கண்டுக்கொண்டு என்னவென போய் பார்த்தாள்
”இந்த கொம்பனை நினைச்சாலே பயமா இருக்கு, இப்பதான் ஒரு பிரச்சனை ஓஞ்சதுன்னு