(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”ப்ச் என்ன பேச்சு இது நான் எப்ப யார் மேல பழிய போட்டிருக்கேன்”

  

”இன்னும் இல்லை இனிமேல போடுவீங்க”

  

”போடுவேனா”

  

”யார் மேல”

  

”என் மேலதான், என்ன செய்றது பொய்யான கணக்கு வழக்குகளை காட்டித்தான் நான் என்னை காப்பாத்திக்கனும் போல இருக்கே, அதையும் செய்றேன்” என்றாள் அலுப்பாக அவளின் பேச்சில் ஏதோ ஒன்று மறைந்திருப்பதை அறிந்த அகத்தியனோ

  

”நாச்சியா நேரா விசயத்துக்கு வா, என்ன பிரச்சனை முதல்ல அதைச் சொல்லு”

  

”சொல்ல என்ன இருக்கு, அடிக்கடி உங்க பேரை சொல்லி உங்க மாமா கணக்கு சொல்லாமலே பணத்தை கொண்டு போறாரு, அந்தப் பணத்தை எந்த கணக்குல எழுதறதுதான் எனக்கு தெரியலை”

  

”இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை ஆமா ஆடிட்டர் என்ன செய்றாரு, அவரு எப்படி கணக்கை சரியாக்கினாரு“

  

”பொய்யே உருவான ஆடிட்டருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்”

  

”ப்ச் ஆடிட்டரை கூப்பிட்டு விசாரிச்சா எல்லாம் தெரிஞ்சிடும்”

  

”ம் கரெக்ட்தான் சார் ஆனா, அவர் உண்மைதான் சொல்றாருக்கு எப்படி நீங்க கண்டுபிடிப்பீங்களாம்”

  

”என் மாமா பணத்தை கேட்டா உன்னை யார் தரச் சொன்னது, என்கிட்ட கேட்டு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.