போகட்டும் அதுக்குள்ள நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம், அப்புறம் நாம ஒண்ணா சேர்ந்து வாழலாம்னு சொன்னாரு, தன்னோட அறையில கூட எனக்கு இடம் கொடுக்கலை அதுக்கு பதிலா உங்க மனைவியோட அறையில என்னை கொண்டு போய் விட்டாரு, அங்கயே என்னை தங்கவும் சொன்னாரு”
”தங்க சொன்னா அதுக்காக புடவை நகையெல்லாம் எடுத்து போட்டுக்குவியா”
”தப்பு என் மேல இல்லை, என்னை கூட்டிட்டு வர்ற அவசரத்தில என்னோட துணிமணி உடைமைகள்னு எதையும் எடுத்துக்கலை, மாத்து துணியில்லாம நான் என்ன செய்றது அதனால பீரோல இருந்த புடவையை எடுத்துக்கிட்டேன்”
”அப்ப இந்த நகை இது லாக்கர்ல இருந்தது, இதை எப்படி எடுத்த, யார் உனக்கு சாவி தந்தது
”சாவியா லாக்கர் திறந்துதானே இருந்தது. புடவை எடுத்து கட்டிக்கிட்ட பின்னாடி எனக்குள்ள ஒரு பரவசம், புதுசா பலசாலியாயிட்டேன், எனக்கே தெரியாம லாக்கர்ல இருந்த நகைகளை நான் எடுத்து அணிஞ்சிக்கிட்டேன், தப்புன்னு வாய் சொன்னாலும் என் உள்மனசு இது உன்னோடதுங்கற மாதிரி நினைக்க வைச்சது”
”ஆக நீ இங்க வந்தது சொத்துக்காகத்தானா”
“சொத்தா”
”ஆமாம் இதப்பாரு நீ என்ன மாயவித்தை செய்தாலும் சரி, உனக்கு இந்த குடும்பத்தோட சொத்து கிடைக்காது”
”நான் சொத்துக்காக இங்க வரலை“
”வேற எதுக்காக என் பேரனை மயக்கி வைச்சிருந்த“
”என்னது வைச்சிருந்தேனா அது சரி அய்யோ பாவம் அடிப்பட்டு வந்தவருக்கு உதவி செய்து காயத்துக்கு மருந்து போட்டு பசிக்கு சாப்பாடு போட்டுன்னு அவரை கவனிச்சதுக்கு எனக்கு