(Reading time: 20 - 39 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”எப்படின்னா என்ன அர்த்தம் அவளுக்கு கொடுத்த புடவை உன்கிட்ட இருக்கு இதை நினைச்சி நான் அப்படியே பீல் பண்ணி அழுது பட்டினி கிடந்து நோயாளியாகி வாழ்வே மாயம்ன்னு பாட சொல்றியா நான் கோவலன் புரியுதா“

  

”சத்தியமா புரியலை இதான் உங்க காதலா”

  

”ஏய் காதலுக்கும் இந்த புடவைக்கும் சம்பந்தம் இல்லை, என்னவோ அன்னிக்கு அவளை துணிக்கடையில பார்த்தேன் இந்த புடவையை வாங்கித் தந்தேன் என் பிறந்த நாளுக்கு கட்டிப்பாள்ன்னு பார்த்தா அவள் என் கண்லயே படலையே”

  

”வருத்தமா இருக்கா”

  

“அப்ப வருத்தப்பட்டேன் இப்ப இல்லை பேசாம என் பிறந்த நாள் வருதுல்ல அன்னிக்கு இதை நீயே கட்டிக்க“

  

”முடியாது மாதவிக்காக வாங்கின புடவையை நான் கட்டிக்கனுமா, எனக்குன்னு வாங்கித்தாங்க கட்டிக்கறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட கோவலன் நொந்துப் போனான்

  

”அய்யோ இவளுக்கு என்னாச்சின்னு தெரியலையே, மாதவியோட போட்டிப் போடறாளே, அந்த மாதவியிருக்காளே என்னை வசமா மாட்டிவிட்டுட்டா, இந்த புடவையை இவள்கிட்டயா தரனும், இப்ப பாரு நான் கண்ணகிக்கு புடவை எடுத்துக் கொடுக்கனும் எனக்கு இது தேவைதான்” என புலம்பிக் கொண்டே துணிக்கடைக்கு சென்றான்.

  

அங்கு தேடி தேடி கண்ணகிக்காக ஒன்றல்ல 10 புடவைகளை வாங்கி வீடு வந்து சேர்ந்து அதை அவளிடம் காட்டினான்

  

”எப்படி”

  

”எது எப்படி”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.