”நீ யார்பா அவளுக்கு செலவு செய்றதுக்கு” என சொல்ல ஒரு நொடி அதிர்ந்துப் போன வேங்கையன் மறுநொடியே செலவுக்கான பில்லை நீட்டி
”அப்பாகிட்ட பணத்தை கொடுத்துடுங்க, நான் மொட்டை மாடியில போய் படுத்து தூங்கறேன் அசதியா இருக்கு” என படபடவென சொல்லிவிட்டு மொட்டை மாடிக்குச் சென்றான்.
அங்கோ மஹதியும் ஜானகியும் இருந்தார்கள், அவர்களை அவ்விடம் இவன் எதிர்பார்க்கவில்லை, இவனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, வேங்கையனைக்கண்டதும் மஹதி கோபத்துடன் எழுந்துச் செல்ல ஜானகி தடுத்து நிப்பாட்டி
”எங்கடி போற”
”நான் போறேன்”
”பேசாம உட்காரு” என உட்காரவைத்தாள்.
வேங்கையனோ யார் இருந்தால் எனக்கென்ன என்பது போல அவனாக வந்து ஒரு இடமாக பார்த்து படுத்து கண்கள் மூட ஜானகியோ வேண்டுமென்றே
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக் கல்லே சிலையாக
தங்க பாலம் கையாக
மலர்களிரன்டும் விழியாக..
மயங்க வைத்தாளோ
என பாடிவைத்தாள்
அந்த பாடலைக்கேட்டு மஹதியும் சரி வேங்கையனும் சரி வெறுப்புற்றார்கள், ஏதாவது