(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”அடிவாங்காத ஜானகி இது உன் வாழ்க்கையில்லை அவளோட வாழ்க்கை அவள் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சி எல்லாத்தையும் கெடுத்துடாத”

  

”என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க, அவளோட அழுகையை பார்த்துமா உங்க மனசு இறங்கலை“

  

”இறங்கலை என்னங்கற இப்ப போ அப்படி” என அவளை தள்ளிவிட மூர்த்தி அவளை பிடித்துக் கொள்ள

  

”மூர்த்தி அவளை கூட்டிக்கிட்டு கிளம்பு அதான் உனக்கு நல்லது இல்லை என்கிட்ட அடிவாங்குவ ம்” என அதட்ட மூர்த்தி ஜானகியிடம்

  

”வா கிளம்பலாம்”

  

”கிளம்பறதா எங்க நம்ம அப்பா அம்மா இங்கதானே இருக்காங்க, நாம போய் எங்க இருக்கறது நான் எங்கயும் வரலை, நானும் இங்கதான் இருப்பேன்” என சொல்ல வேங்கையன் உடனே குபேரனிடம்

  

”இதுக்குதான் நான் உங்களை கூட்டிட்டு வரமாட்டேன்னு சொன்னேன், வீம்பு செய்தீங்க இப்ப பாருங்க உங்க பொண்ணு பிடிவாதம் பிடிக்கறா, இது தேவையா எனக்கு ஜானகியை கூட்டிக்கிட்டு கிளம்புங்க இங்கிருந்து” என சொல்ல குபேரனோ

  

”இதப்பாருப்பா மஹதியும் எனக்கு பொண்ணு போலதான் அவளோட கல்யாணத்துக்கு நான் இல்லைன்னா எப்படி நான் போகப் போறதில்லை” என தெளிவாக சொல்ல வேங்கையனோ

  

”எப்படியாவது போங்க” என சொல்லிவிட்டு இருக்கயைில் அமர்ந்து தன் தாயிடம்

  

”அம்மா நீ சொல்லு அடுத்து என்ன எழுதறது” என கேட்க மங்களமோ

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.