”உன்னாலயே கோவலன் மாட்டிக்கிறான் நீ அவன் வாழ்க்கையை விட்டு போகவே மாட்டியா” என திட்ட மாதவி கலங்கினாள் கண்ணகி உடனே அவரிடம்
”அவளை ஏன் திட்டறீங்க அவளுக்கு உதவ போனதாலதானே அவருக்கு இப்படி நடந்துச்சி, அதுக்கு அவள் என்ன செய்ய முடியும் நடந்தது எதுவுமே தெரிஞ்சி நடந்தது இல்லை தெரியாம நடந்தது”
”என்னவோம்மா இந்த பிரச்சனை முடிஞ்சி கோவலன் வெளிய வந்தபின்னாடி இதோ இவளால உனக்கு பெரிய பிரச்சனை வரப்போகுது, கோவலனை விட்டுக்கொடுத்துடாதம்மா” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட கண்ணகியோ மாதவியிடம்
“மாதவி அவர் பேச்சை பெரிசா நினைக்காத விட்டுடு”
”பரவாயில்லை அவர் சொன்னதும் சரிதானே என்னாலதானே கோவலன் இப்படி மாட்டிக்கிட்டாரு”
”இந்த பேச்சுதான் வேணாம்ங்கறது, இப்போதைக்கு எதுவுமே தெரியலை முதல்ல நாம ஆதாரங்களை திரட்டனும்”
”எங்க இருந்து ஆரம்பிக்கறது”
”முதல்ல செத்தது சிலம்புதானான்னு பார்க்கனும்”
“அதுக்கு என்ன செய்யலாம்ங்கற”
”எப்படியும் சிலம்புவோட உடம்பை ஆஸ்பிட்டல் மார்ச்சுவரியில்தான் வைச்சிருப்பாங்க அங்க போய் பார்க்கலாம்”
”நம்மளை உள்ள விடுவாங்களா தடுக்க மாட்டாங்க”