”சொல்லுங்க”
“சொன்னா வருத்தப்பட மாட்டியே”
”கண்டிப்பா இல்லை சந்தோஷப்படுவேன்”
”அப்படியா உன்னை சந்தோஷப்படுத்த கூடாதே சரி என் மனசுல இப்ப யார் இருக்கான்னு தெரியுமா”
”சொல்லுங்க”
”யார்கிட்டயும் சொல்லக்கூடாது முக்கியமா கண்ணகிகிட்ட”
”சொல்லலை சொல்லுங்க”
”என் மனசுல சிலம்புதான் இருக்கான் போதுமா”
“அய்யே”
”போம்மா போய் ஆதாரத்தை தேடு, சின்ன பிள்ளைங்க போல நீயும் அவளும் நடந்துக்காதீங்க, நேரத்துக்கு சாப்பிடுங்க என்னை நினைச்சி கவலைப்பட்டு பசி பட்டினியுமா இருக்காதீங்க அவள் சாப்பிடலைன்னா நீதான் அவளை சாப்பிட வைக்கனும், அவளை உன் பொறுப்புல விடறேன் சரியா”
”நான் அவளை பார்த்துக்கிறேன் வரேன்” என சொல்லிவிட்டு மாதவி வெளியேறி வர கண்ணகியோ கண்கள் கலங்கியபடி நின்றிருந்தாள். அவளின் அழுகையைக்கண்டு மாதவிக்கு சிரிப்புதான் வந்தது
”என்னடி சிரிப்பு உனக்கு”