”கோவலன் மேல நீ வைச்சிருக்கற காதலை நினைச்சி எனக்கு பூரிப்பா இருக்கு”
”போடி”
“சரி நான் அவர்கிட்ட பேசிட்டேன் அவரும் நீ சொன்னதைதான் சொன்னாரு கூடவே செத்தது சிலம்பு இல்லைன்னு சொன்னாரு“
”எனக்கும் அதே எண்ணம்தான்”
”எனக்கென்னவோ அந்த சிலம்பு வில்லங்கம் பிடிச்சவன், ஏதோ ஒரு உடம்பை வைச்சி தான்தான் செத்ததா கதை கட்டி கோவலனை சிக்க வைச்சிட்டானோ”
”இருக்கலாம்”
”கோவலன் சொல்றாரு முதல்ல அந்த உடம்பு சிலம்புவோடதே இல்லைன்னு நிரூபிக்கனுமாம், அதை வைச்சே அவர் வெளிய வந்துடுவாராம்”
“அப்படியா சொன்னாரு சரி அப்படியே செய்துடலாம்”
“என்ன ஈசியா சொல்ற எப்படி ஆதாரங்களை திரட்டுவ”
”பார்த்துக்கலாம் மாதவி நீ வா” என அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.
சிலம்பு உடன் வேலை பார்த்த ஆட்களிடம் சென்று விசாரித்தாள், அவரவர்கள் தங்களுக்கு தெரிந்த சிலம்புவை பற்றின விசயங்களை கூற அதை மாதவி ஒரு நோட்டில் எழுதிக் கொண்டாள், சிலம்பு தங்கியிருந்த இடத்தில் கூட விசாரித்தாள் அவனது வீட்டை சோதனையிட்டாள், பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை ஆயாசத்துடன் வீடு திரும்பினாள்
”கண்ணகி இன்னும் ஒரு நாள்தான் இருக்கு, எப்படி ஆதாரத்தை தேடறது”