”இப்ப நீ என்ன சொன்ன”
”இல்லை நீங்க சொன்ன உயிலை பத்தி இந்த வீட்ல 3 பேருக்கு தெரிய வாய்ப்பிருக்குன்னு சொன்னேன்”
”யாரைச் சொல்ற”
”ஒண்ணு உயில் எழுதினவங்களுக்கு தெரியும், இன்னொன்னு உங்க தாத்தாவுக்கு தெரிய வாய்ப்பிருக்கு, 3வது இந்த வீட்ல வேலை செய்றவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்”
”வேலை செய்றவங்களுக்கு எப்படி“
”பல வருஷமா வேலை செய்றவங்களுக்குதானே வீட்டோட ரகசியம் தெரியும்” என சொல்ல அவனோ குழம்பினான். அவளோ
”இந்த விசயத்தில என் உதவி உங்களுக்கு தேவைப்பட்டா கண்டிப்பா நான் உதவி செய்ய காத்திருக்கேன்”
”வேணாம்”
”இல்லை எனக்கு இங்க பொழுதே போகலை அதான்”
”பொழுது போகலைன்னா போய் கார்மெண்ட்ஸை பார்த்துக்க போ”
”ஏன் நீங்க போகலையா“
”எனக்கு முக்கியமான வேலையிருக்கு, எனக்கு பதிலா கொஞ்சநாளுக்கு நீ கார்மெண்ட்ஸை பார்த்துக்க கவனம்”
”என்னை அனுப்பிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க ஓஓ அந்த உயில் பத்திரத்தை