என்னை கல்யாணம் செய்துக்கிட்டு இங்க கூட்டிட்டு வந்தீங்க, நானா வரலை, உங்ககூடதான் உங்கப்பா சண்டை போட்டாரு, அப்படியிருக்கறப்ப என்மேல மட்டும் சந்தேகப்பட்டா எப்படி ஒருவேளை உங்க மேல இருந்த வெறுப்புல கூட அவர் தற்கொலை செய்திருக்கலாம் இல்லையா“
”நானா“
”ஆமாம் அவருக்குப் பிடிக்காத கல்யாணத்தை செய்து நீங்க அவருக்கு பெரிய தலைகுனிவு கொண்டு வந்தீங்களே அந்த அவமானத்துக்காக கூட தற்கொலை செய்துக்கிட்டு இருக்கலாம் வாய்ப்பிருக்குங்க“
“நீ என்னை சந்தேகப்படறியா நாச்சியா”
”நீங்க மட்டும் என்னை சந்தேகப்படலாமாங்க“
”அவங்ககிட்ட பேசறப்பலாம் நீ நக்கலாவும் ஏதோ சில விசயங்களை மறைச்சி வைச்சி பேசி அவங்களை பயமுறுத்தினதையும் நான் பார்த்திருக்கேன்“
”ஏங்க அவங்க என்ன சின்ன குழந்தையா, நான் மிரட்டினா பயப்படறதுக்கு உங்களுக்கே தெரியும் என்னோட துணிச்சல்பத்தி, உங்ககிட்டயே நான் தைரியமா பேசுவேன், அதே போலதானே அவர்கிட்டயும் பேசினேன், நான் பேசினதுக்காக ஒருத்தர் தற்கொலை செய்துக்கிட்டார்ன்னு சொல்றது ரொம்ப அபத்தமா இருக்குங்க” என சொல்ல அகத்தியன் குழம்பிப் போனான். நாச்சியாவோ அவனின் குழம்பிய முகத்தையே பார்த்து மென்மையாகச் சிரித்தாள்
”உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன் உங்கப்பா அறையை சோதனை போடுங்க, கண்டிப்பா அவர் தற்கொலைக்கான காரணத்தை ஏதாவது ஒரு காகிதத்தில எழுதி வைச்சிருப்பாரு, அதை போய் முதல்ல தேடுங்க”
”இதெப்படி உனக்குத் தெரியும்“