(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”பெரிய இடத்து பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டா பிறந்த இடம் மாறிடுமா என்ன அந்த காலத்தில இரண்டா இருக்கற ஊரை ஒண்ணாக்கனும்னு நினைச்சி உங்க பாட்டி அதான் ஆண்டாள் நாச்சியாரை உங்க தாத்தாவுக்கு கல்யாணம் செய்து வைச்சாங்க அவருடைய அப்பா ஆவுடையப்பன், அதுக்கு முன்னாடி உங்க தாத்தா கீழவீதியை சார்ந்தவரு அது மட்டுமில்ல, அந்தக் காலத்திலயே அவரு பெரிய போராளியா இருந்திருக்காரு, உங்க பாட்டன் ஆவுடையப்பனை எதிர்த்து புரட்சி செய்திருக்காரு, இதுக்கெல்லாம் ரிக்கார்ட்ஸ் இருக்கு, கூடவே ஊர்க்காரங்களை விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டோம்” என சொல்ல அகத்தியன் ஆடிப்போய்விட்டான்.

  

இதைதானே நாச்சியாவும் சொன்னாள், அந்த நினைவு வரவும் அகத்தியன் காவல் அதிகாரியிடம்

  

”என் தாத்தாதான் அந்த ஆளுங்களை கொன்னதா சொல்றீங்களா”

  

”நாங்க அப்படி சொல்ல வரலை, அவரை விசாரிச்சாதான் மேற்கொண்டு என்ன செய்யலாம்னு முடிவு எடுக்க முடியும்“

  

”இப்பவே செய்தித்தாள் மூலமா இந்த செய்தி பரவிடுச்சி, என்னால வெளிய தலைகாட்ட முடியலை இப்ப தாத்தாவை இங்க கூட்டிட்டு வந்தா இன்னும் வதந்திகள் பரவும், மக்கள் மத்தியில எங்க குடும்பத்துக்குன்னு இருக்கற கௌரவம் செல்வாக்கு எல்லாம் சரியும்” அதற்கு காவல் அதிகாரி அகத்தியனிடம்

  

”நோ ப்ராப்ளம் நாங்களே உங்க வீட்டுக்கு வர்றோம்“

  

”அப்பவும்தானே எங்க கௌரவம் போகும்”

  

”இப்படி சொன்னா எப்படி, எங்களையும் வேலை பார்க்க விடுங்க, நாங்க ஒண்ணும் உங்க தாத்தாவை கைது செய்ய வரலை இந்த எலும்புக்கூடுகளை பத்தி விசாரிக்கத்தான் போறோம் அவ்ளோதான்” என சொல்ல அகத்தியன் ஒருமனதாக சரியென தலையாட்டிவிட்டு கையோடு அவர்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.