(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”சொல்லுங்க”

  

”இதுக்கு முன்னாடி நான் கீழவீதியில இருந்தேன்”

  

”கீழவீதியில இருந்த நீங்க எப்படி இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தீங்க“

  

”அதுக்கு நான் காரணம் இல்லை அப்ப இருந்த ஆவுடையப்பன்தான் என்னை அவர் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைச்சாரு, அதுக்கு அப்புறம் இருந்து நான் இங்கதான் இருக்கேன்”

  

”எப்படி உங்களுக்கு தன் பொண்ணை கல்யாணம் செய்து வைச்சாரு ஆவுடையப்பன், அதுக்கு வலுவான காரணம் இருக்கனுமே இல்லை ஏதாவது காதல் கீதல்னு”

  

”இந்த ஊர் ஒண்ணாகனும்ங்கற எண்ணத்தில கல்யாணம் செய்து வைச்சாரு”

  

”அய்யோ அப்படி சொல்லாதீங்க மாட்டிப்பீங்க, காதல் விவகாரம்னு சொல்லுங்க”

  

”ஏன் அப்படி சொல்லனும்”

  

”பின்ன ஊர் ஒண்ணாகனும்னு உங்களுக்கு கல்யாணம் செய்தாங்க ஆனா இப்ப ஊர் என்ன ஒண்ணாவா இருக்கு”

  

”சரி சரி காதல் விவகாரம்னே சொல்றேன்”

  

”அந்த எலும்புகூடுகளை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க”

  

”அது யாரோடதுன்னு எனக்குத் தெரியாது, நான் வர்றதுக்கு முன்னாடியே இந்த வீட்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம் அது என் மாமனார்க்குதான் தெரியும்”

  

”யார் மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருக்குதா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.