“அதுக்கில்லை நாச்சியா நாம எப்படி அநாதைகளானோம்”
“ப்ச் வந்தது கேஸ் முடிக்க, நீ என்னடான்னா நம்மளை பத்தி பேசற அகத்தியா“
”நானும் கேஸ் முடிக்கதான் வந்தேன் வந்த இடத்தில இந்த சிலைகளை பார்த்ததும் எனக்குள்ள ஒரு சந்தேகம் வந்தது, நாம ஏன் அவங்களை போல இருக்கோம் அப்படின்னா நாம அவங்களோட வாரிசா என்ன”
”அவங்களோட தலைமுறையை சார்ந்தவங்கன்னு சொல்றியா”
“ஆமாம் யோசிச்சிப்பாரு, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு கலவரம் நடந்திருக்கு அதுல நிறைய பேர் இறந்துட்டாங்க அகத்தியன் நாச்சியாவையும் சேர்த்து சொல்றேன் ஒருவேளை நாம இந்த ஊர்க்காரங்களா இருந்து நிறைய பொதுமக்கள் செத்தாங்கள்ள அவங்களோட பிள்ளைகளா இருந்து அதனால நம்மளை ஆசிரமத்தில விட்டிருக்கலாம்ல”
”இருக்கலாம்”
”இந்த கேஸ் நம்மளை வேற பக்கம் திசைதிருப்புது”
”இப்ப என்ன செய்ற“
”ஆசிரமத்தில விசாரிக்கனும்”
”அப்பா அம்மா யாருன்னா”
“ம்“
“அவங்களுக்கு தெரியலைன்னா”