”நாச்சியா வா சாப்பிடலாம்“
”எப்படி அகத்தியா உன்னால மட்டும் இப்படிமுடியுது”
”ஓ நான் சமைக்கறதை பத்தி சொல்றியா, உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்“
”நான் இதை சொல்லலை கேஸ் பத்தி யோசிக்காம நீ பாட்டுக்கு கூலா இருக்கியே”
”அதுக்காக பட்டினி கிடக்க சொல்றியா என்னால முடியாது, நான் பாஸ்தா சாப்பிடறேன்” என சொல்லி அவன் பாஸ்தா சாப்பிட அவனை முறைத்துக் கொண்டே நூடுல்ஸ் சாப்பிட்டு முடித்தாள் நாச்சியா இருவரின் பசியும் அடங்கியது.
அகத்தியன் பொறுமையாக அவளிடம்
”கேஸ் பார்க்கலாமா”
”ம் இப்பவாச்சும் உனக்கு தோணிச்சே“
”என்ன செய்றது, இப்பதான் சாப்பிட்டேன் உடனே தூங்கமுடியாது, உன்னோட ரொமான்ஸ் பண்ணலாம்னா நீ வரமாட்ட, தூங்கறவரைக்குமாவது இதைப் பார்க்கிறேன், இதைப் பார்த்தா எனக்கு நல்லா தூக்கம் வருது நாச்சியா”
என சொல்ல அவனின் தோளில் 2 அடி போட்டாள் நாச்சியா
”ஏய் ஏன் அடிக்கற“
”சீக்கிரமா இந்த கேஸ் முடிக்கலாம்”
”முடிக்க முடியாத கேஸ் வைச்சிக்கிட்டு நீ என்னை ரொம்ப கஷ்டப்படுத்தற“