(Reading time: 18 - 35 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

“அதை விடு இந்த கேஸ்ல ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுது அகத்தியா, அதை என்னன்னு கவனிச்சியா“

  

”அதை பத்தி தெரிஞ்சிக்கனும்னா நாம அந்த ஊருக்குதான் போகனும்”

  

”அப்படின்னா நாளைக்கே நாம அங்க போகலாம்”

  

”சரி போகலாம் இப்ப தூங்கலாமா தூக்கம் வருது”

  

”இப்பதானே சாப்பிட்ட அதுக்குள்ள தூக்கமா“

  

”நான்தான் சொன்னேன்ல இந்த கேஸ் எடுத்தாலே தானா தூக்கம் வரும்னு, நீதான் நம்பலை இதப்பாரு நாச்சியா இப்படியே அந்த ஃபைலை கட்டிக்கிட்டு குழம்பறதை விட நேரா நாம அந்த ஊருக்கே போய் என்ன ஏதுன்னு பார்க்கறது மேல்“

  

”சரியாதான் சொல்ற சரி நீ தூங்கு எதுக்கும் நான் வேற ஏதாவது க்ளு கிடைக்குதான்னு பார்க்கிறேன்”

  

”உன்னை திருத்தவே முடியாது எப்படியாவது போ என்னை நிம்மதியா தூங்கவிடு அது போதும்” என சொல்லிய அகத்தியன் உறங்கலானான். அவன் உறங்குவதைக் கண்ட நாச்சியாவோ நொந்துக் கொண்டு மறுபடியும் அந்த ஃபைலை பார்க்கலானாள்.

  

மறுநாள் காலையில் அகத்தியன் அவனது பைக்கில் நாச்சியாவை அழைத்துக் கொண்டு அம்பேத்கர் நகருக்கு சென்றான். போகும் வழியெங்கும் நாச்சியா கேஸ் பற்றியே பேச அகத்தியனோ அவளின் அழகை வர்ணித்துக் கொண்டும் ஹனிமூன் பற்றின விசயங்களை பேசிக் கொண்டே வந்தான்.

  

அம்பேத்கர் நகர் என போர்டு வந்ததும் வண்டியை நிப்பாட்டினான் அகத்தியன்

  

”வந்தாச்சி நாச்சியா இனி என்ன செய்யலாம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.