”ஏதாவது தகவல் வைச்சிருப்பாங்க கேட்டுப்பார்க்கலாம்”
”இப்பவே இங்கிருந்து கிளம்பனுமா”
”ஏன் கேட்கிற“
”இல்லை வந்தது வந்தாச்சி கொலை நடந்த வீட்டை பார்த்துட்டு போகலாமே”
”சரி வா” என அவளை அழைத்துக் கொண்டு மக்களிடம் விசாரித்தபடியே ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டை அடைந்தான் அகத்தியன்.
கவனிப்பார் இன்றி கிடந்தது. அந்த வீட்டில் நிறைய கொலைகள் நடந்தபடியால் மனித நடமாட்டமே இன்றி வெறிசோடிக் கிடந்தது. இவ்விருவரும் துணிச்சலாக அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள், வீட்டில் இருந்த பொருட்களுக்கு பலத்த சேதாரம் அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தது, அந்த உடைந்த பொருட்களுக்கு மத்தியில் அப்படி இப்படி என அலைந்து ஒவ்வொரு இடமாக நோட்டம் விட்டார்கள் இருவரும் ஏதாவது தகவல் கிடைக்குமா என்று அலைந்து திரிந்து ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தார்கள்
”எதுவும் கிடைக்கலை”
”இங்கிருக்கற போட்டோக்களை பார்த்தியா”
”ம் பார்த்தேன்“
”அந்த பெரிசுதான் ஆவுடையப்பனா இருக்கனும்“
”எதை வைச்சி சொல்ற”
”அந்தக் காலத்தில போட்டோலாம் கிடையாது ஓவியமாதான் வரையனும் அந்த ஓவியத்தை பார்த்தா ஆவுடையப்பன்தான்னு தோணுது“