”இப்படி அழகா ஓவியம் வரைஞ்சாங்களே கீழே இன்னார்ன்னு எழுதக்கூடாது”
”ம்க்கும் ரொம்ப முக்கியம் அடுத்த போட்டோவைப்பாரு அது”
”அவங்கதான் சங்கமேஸ்வரன்“
”ஆமாம் அந்தாளு மனைவிதானே ஆண்டாள் நாச்சியார்“
”ஆமாம்”
”அந்தம்மா போட்டோ எங்க”
”தெரியலையே”
“சரி இங்கப்பாரு நாம ஊருக்கு நடுவில பார்த்தோமே அகத்தியன் நாச்சியா சிலைகள் அவங்களோட போட்டோக்கள்தான் இது இதை மாடலா வைச்சிதான் சிலையை செய்திருக்காங்க“
”நைஸ்ல அப்படியே நம்மளை பார்க்கற மாதிரியிருக்கு”
”அதான் குழப்பமா இருக்கு கமிஷனர் இந்த கேஸை ஏன் நமக்கு தந்தார்னு இப்பதான் விளங்குது”
”ஆமாம் ஏகப்பட்ட விவரங்களை சொன்ன கமிசனரு, எதுக்காக இந்த முக்கியமான விசயத்தை நமக்கு சொல்லலை“
”சொன்னா நாம நம்பமாட்டோம் இப்படி விசாரனைக்காக வந்தா, நாமளே இதைப் பார்த்தா நமக்கு ஆர்வம் அதிகமாகும்லயா அதனால சொல்லியிருக்க மாட்டாரு”