(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

  

கலைவாணி ப்ரியம்வதாவின் கையை இழுத்துக் கொண்டு தன்னோடு அழைத்துச் சென்றாள்.

  

ப்ரியம்வதாவிற்கு தலையே வெடித்து விடும் போல குழப்பமாக இருந்தது.

  

ஆனால் ஒரே ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது,  வினாயக்கிற்கு உதவி தேவைப்படுகிறது. அவனை இந்த நிலையில் தனியாளாக விடுவது நல்லதில்லை.

  

இதையே யோசித்துக் கொண்டு கலைவாணி உடன் மதியூரில் கடை, கடையாக போய் கொண்டிருந்தவளின் கண்ணில் சின்ன துணுக்கு செய்தி பட்டது. மதியூரின் லோக்கல் செய்திகள் வெளிவரும் சிறிய அளவு செய்திதாளில், SS Private Investigators என்ற பெயரும், விலாசமும் இருந்தது.

  

🌼🌸❀✿🌷

   

“... அம்மா கிட்ட கோவிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு இங்கே வந்தேன்!” வினாயக் மேலே அவளுக்கு இருக்கும் காதல் தவிர மற்ற அனைத்து உண்மைகளையும் சொல்லி முடித்து சக்தி, சத்யாவைப் பார்த்தாள் ப்ரியம்வதா.

  

“ஸோ, வினாயக்கை பிடிக்காத யாரோ இந்த மாதிரி எல்லாம் செய்றாங்கன்னு நீங்க நினைக்குறீங்க? அது யாருன்னு எங்களை கண்டுப்பிடிக்க சொல்றீங்க. சரியா?” சக்தி உறுதி செய்துக் கொள்ள விரும்புபவளைப் போல வினவினாள்.

  

“ஆமா சக்தி மேடம். வினாயக் யாரையும் சின்னதா கூட ஹர்ட் செய்ய மாட்டார். அவர் அவரோட மெஷின் வச்சு ஷூட் செய்தார், கத்தி போட்டாருன்னு நினைக்குறதே தப்பு,” என்றாள் ப்ரியம்வதா

  

“அது உங்க நம்பிக்கை ப்ரியம்வதா! நாங்க இதை இன்வெஸ்டிகேட் செய்றதா இருந்தா முதல்லேயே உங்களுக்கு ஒரு விஷயம் புரியனும்!”

  

“என்ன அது?”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.