(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

“அடடா, சஞ்சீவ் சன் க்ளாஸை மறந்து வச்சுட்டுப் போயிட்டார். நான் கொடுத்துட்டு வரேன்...” என்று சொல்லி, சன் க்ளாஸை எடுத்துக் கொண்டு அவசரமாக வாசலுக்கு வந்தாள் கீதா.

  

பைக்கில் ஏறி கிளம்ப தயாராகி கொண்டிருந்த சஞ்சீவ், கீதாவை கவனித்து,

  

“என்ன அண்ணி???” என்றான்

  

“இந்தாங்க சன் க்ளாஸ்...”

  

“ஓ! அங்கேயே வச்சுட்டு வந்துட்டேனா! தேங்க்ஸ் அண்ணி...”

  

“சஞ்சீவ்... என்ன இப்படி திடீர்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டீங்க? இந்து பாவம் சஞ்சீவ்... நான் சொல்லி இருக்கேன் தானே, அவ கொஞ்சம் சென்சிடிவ் டைப்... இதை எல்லாம் மெதுவா யோசிச்சு செய்யனும்...”

  

“அண்ணி ப்ளீஸ்... இதை பத்தி பேச வேண்டாமே...”

  

“இல்லை சஞ்சீவ்... எப்படி பேசாம இருக்க முடியும்? இந்து அப்படி உங்க கிட்ட அன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் சரி பட்டு வராதுன்னு சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்... நான் என்னன்னு கண்டுப்பிடிச்சு சொல்றேன்...”

  

“இருக்கட்டும் ஆயிரம் காரணம் இருக்கட்டும்... எனக்கு அவப் பேரை கேட்கவே பிடிக்கலை... இப்படி அவளை பத்தியே பேசிட்டு இருக்கிற உங்களையும் பிடிக்கலை...”

  

முதல் முறையாக குரலை உயர்த்தி சஞ்சீவ் கோபமாக பேசவும்,

  

“இல்ல சஞ்சீவ்,” என்று விளக்க முயன்றாள் கீதா.

  

ஆனால் சஞ்சீவ் அதை கேட்கும் மனநிலையில் இல்லை!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.