அதுவும் காலை நேரத்தில் கதகதப்பாக இருந்தாலும் அந்த கடல் காற்றிலும் குப்பென வேர்க்க படபடப்பாக உணர்ந்தாள் நந்தினி
அவளின் தலையில் வைத்த பூவின் வாசத்தை முகர்ந்தவன் கண்கள் மூடி அவள் காதருகே
”பேசு” என ஹஸ்கி வாய்சில் பேசவும் அவளுக்கு நாக்கு வரண்டுவிட்டது. பேச முடியாமல் தவித்தாள்
”ஏதாவது பேசு உன் குரலை கேட்கனும் போல இருக்கு” என அவன் ஆசையாக பேசவும் அவள் உடனே சுற்றி முற்றி பார்த்தாள். மக்கள் அங்கும் இங்கும் இருக்க அவளுக்கு கூச்சம் பயம் அதிகமாகி அவனிடம்
”அத்தான் எனக்கு பசிக்குது” என்றாள். அதில் உடனே கண்கள் திறந்தவன் மெதுவாக அவளை பார்த்தான்.
”ஆமாம் நீ இன்னும் சாப்பிடலைல்ல அதான் உன்னால பேச முடியலை சரி வா இங்கதான் நிறைய ஒட்டல்கள் இருக்கே அங்க போய் சாப்பிடலாம். அப்புறம் பேசலாம்” என அவளை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றவன் யாரும் தொந்தரவு செய்யக்கூடாதென பேமிலி ரூம்க்கு சென்றான். அங்கு காலியாக இருக்கவே ஒரு டேபிளில் அமர்ந்தவன் அவளுக்கு நிறைய டிபன் ஐட்டங்களை ஆர்டர் செய்தான் ரிஷி.
”அத்தான் எதுக்கு இவ்ளோ ஆர்டர் பண்றீங்க”
“ஏன் நல்லா சாப்பிடு பாரு எப்படி தேஞ்சி போயிருக்க. ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு நீ ஒல்லியாயிட்ட” என சொல்ல அவள் தன்னையே ஒரு முறை பார்த்து விட்டு ரிஷியை பார்த்து அழகாக சிரித்தாள் அந்த சிரிப்பில் மதிமயங்கியவன்
”எதுக்கு சிரிக்கற” என ஆசையாக கேட்க அதற்கு அவள்
”அத்தான் நான் அப்படியேதான் இருக்கேன் ஒல்லியும் ஆகலை குண்டும் ஆகலை வந்த நாள்ல எப்படியிருந்தேனோ அப்படியேதான் இருக்கேன் அத்தான்” என சொல்ல
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.