பெத்துக்கலாம் ஒருவேளை உன்னால குழந்தையை ஒழுங்கா வளர்க்க முடியலைன்னா நமக்கு குழந்தையே வேணாம், இருக்கறதை பார்த்துக்கலாம் என்ன சொல்ற”
”இல்லை தருண் என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது”
”ஏன் முடியாது நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு சொல்லு“
”இங்க பாருங்க எல்லாருக்கும்தான் வேலைகள் இருக்கு, என்னை விட பெரிய பதவியில இருக்கறவங்க கூட குழந்தையை பெத்து வளர்க்கறாங்க, என்னாலயும் குழந்தையை பெத்து வளர்க்க முடியும், நான் வேலைக்குப் போனா என்ன குழந்தையை பார்த்துக்க ஒரு ஆயாவை வைச்சிட்டு போறேன், குழந்தையோட வளர்ப்பு தவறாகுமோன்னு நீங்க சந்தேகப்பட வேணாம், நான் நல்லபடியாவே வளர்த்து ஆளாக்குவேன்”
”இல்லை ஹரிணி உன்னால முடியாது, ரிஸ்க் எடுக்காத, அப்புறம் குழந்தை தறுதலையா வளர்ந்து ஆளான நீதான் ரொம்ப கவலைப்படுவ“
”ப்ச் என்ன பேச்சு இது, உங்ககிட்ட குழந்தை வேணும்னு கேட்டதுக்காக இங்கயா கூட்டிட்டு வருவீங்க, இதைப்பத்தி நீங்க முன்னாடியே சொல்லியிருந்தா சத்தியமா நான் இங்க வந்திருக்க மாட்டேன்”
”ஏன் இப்படி சுயநலமா இருக்க ஹரிணி, பாவம் அநாதை குழந்தையை தத்து எடுத்து வளர்க்கறதால, உனக்கு என்ன கஷ்டம் வந்துடப் போகுது புண்ணியமாவது சேரும்ல”
”எனக்கு புரியுது தாராளமா நான் தத்து எடுக்கறேன் ஆனா, நமக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும், அதுக்கு அப்புறம் நான் இங்க வந்து ஒரு குழந்தையை தத்து எடுக்கிறேன் இது சத்தியம்“
”சத்தியம்லாம் வேணாம் ஹரிணி வந்தது வந்தாச்சி, நீ ஆசைப்பட்ட குழந்தையை தத்து எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகலாம் வா”
”முடியாது தருண்”