”சே சே நான் ஒண்ணும் உன்னை அவாய்டு பண்ணலை ஹரிணி, என்னவோ தெரியலை சந்தர்ப்பம் அமையலை நேரம் கூடி வரலை“
”இல்லை வேற என்னவோ பிரச்சனை உங்களுக்கு சொல்லுங்க எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்”
”பிரச்சனையா எனக்கா சே சே நாளைக்கு கண்டிப்பா செய்யலாம் போ போய் தூங்கு”
”எனக்கு குழந்தைகள் வேணும் தருண், அதுக்குதான் இப்படி உங்க பின்னாடியே அலையறேன், கெஞ்சறேன் ப்ளீஸ் என் உணர்ச்சிகளை புரிஞ்சிக்குங்க”
”புரிஞ்சிக்கிட்டேன் ஆனா, இப்பவே எதுக்கு குழந்தை”
”எனக்கு வேணும்”
”உன்னால 10 மாசம் குழந்தைகளை சுமக்க முடியுமா“
”ஏன் முடியாது கண்டிப்பா சுமப்பான்”
”உனக்கு குழந்தையை வளர்க்க தெரியாது ஹரிணி”
“எல்லாம் நான் வளர்த்துப்பேன், எனக்கு குழந்தை வேணும் தருவீங்களா மாட்டீங்களா” என கத்திவிட அவனுக்கு திக்கென்றது, அவளிடம் சமாளிப்பாக ஏதேதோ பேசி சரிகட்டிவிட்டான் ஹரிணியும் அவனது நிலைமையை எண்ணி மகிழ்ந்தாள்
மறுநாள் விடுமுறை என்பதால் காலையிலேயே ஹரிணி தருணை நச்சரிக்கலானாள்
”தருண் ப்ளீஸ் தருண் குழந்தை வேணும்”
”காலையில என்ன பேச்சு இது“