Page 8 of 19
வேண்டா வெறுப்பாக தலையை ஆட்டி வைக்க அவளோ அந்த பொம்மைகளை ஷெல்ப்பில் அடுக்கி வைத்துவிட்டு பார்த்தாள்
”தருண் எப்படி சூப்பரா இருக்கா”
”ம்ம்ம்”
”என்ன பேசுங்க தருண்”
”வேற லெவல் போதுமா”
”போதும் நான் போய் ப்ரெஷாயிட்டு வரேன் சீக்கிரமா சாப்பிடலாம்”
”ஏன் வேலை ஏதாவது இருக்கா என்ன“
”இல்லை தருண் சீக்கிரமா சாப்பிட்டு நாம கொஞ்ச நேரம் ஒண்ணா இருக்கலாம்” என அவனிடம் வந்து நெளிந்தாள், அவளின் மன ஓட்டத்தை புரிந்துக் கொண்டதும் அதிர்ந்தான் தருண்
”இன்னிக்கா”
”ம்ம்”
”இன்னிக்கு வேணாம்”
”ஏன்“
”வேணாம்னா விடு”
”அதான் ஏன்”