கண்டு தருணே வியந்தான்
”நான் ஆபிசுக்கு போய்ட்டு வந்துடறேன் தருண்”
”சரி பத்திரம்”
”தருண் நான் வேணா உங்களை மறுபடியும் ஆபிஸ்ல வேலைக்கு சேர்க்கவா” என கேட்க அவனுக்கு வெறுப்பாக இருந்தது
”வேணாம் ஹரிணி”
”ஏன்”
”வேணாம் என் மனசு கொஞ்சம் அப்செட்டா இருக்கு, திரும்பவும் நான் ஆபிசுக்கு வந்தா எவனாவது என்னை கேலியா பேசுவான், அதைக்கேட்டு இன்னும் என் மனசு உடையும், எதுக்கு கொஞ்ச நாள் போகட்டும், என் மனசு அமைதியான பின்னாடி எனக்கான வேலையை நானே பார்த்துக்கிறேன்”
”ஓ பரவாயில்லை தருண், நீங்க வேலைக்கு போற வரைக்கும் நான் வீட்டை பார்த்துக்கிறேன் எல்லா செலவும் என்னோடது ஓகேவா”
”டபுள் ஓகே”
”ஓகே பை பை” என அவள் சொல்லிவிட்டு சென்றுவிட தருணோ கலகலவெனச் சிரித்தான்
”எது எப்படியோ வேலைக்கு போகாம ஹாயா வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம், எந்த டென்ஷனும் இல்லாம ஜாலியா வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்” என நினைத்தபடியே இளங்கோவின் போட்டோவைப் பார்த்தான்
”சாரி இளங்கோ ஹரிணி இப்ப முழுசா என் கைக்குள்ள வந்துட்டா, இனி அவள் உன்னை நினைக்க மாட்டா, அதனால உன்னை முதல்ல இந்த இடத்தை விட்டு எடுக்கறேன், இனி நீ