(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”உங்களை பார்க்கனும் போல இருக்கு“ என இழுத்துச் சொல்ல அவனோ கலகலப்பாகச் சிரித்துவிட்டு

   

”வீடியோ கால்க்கு வரேன் இரு” என சொல்லிவிட்டு பட்டென போனை கட்செய்தான்.

   

”என்னது தருண் இவ்ளோ ரிலாக்ஸா பேசறான்னா அப்போ கேமரா இருந்த விசயம் அவனுக்கு தெரியலை போல தப்பிச்சிட்டோம், அப்ப அந்த கேமரா எங்க போயிருக்கும்” என பலமாக யோசிக்க அதே நேரம் தருணிடம் இருந்து வீடியோ கால் வர அதை ஆன் செய்தாள். 

   

தருணின் முகம் தெரிந்தது, முகம் தெளிவாக இருந்தது, கோபம் இல்லை, சந்தேகம் இல்லை, மகிழ்ச்சி என்ற ஒன்று தவிர அவள் சந்தேகப்பட்ட எந்த உணர்ச்சியும் இல்லை, அதில் அவள் நிம்மதியாகி மென்மையாகச் சிரித்தாள்

   

”இப்பதான் உனக்கு என் மேல லவ்வே வந்திருக்கு ஹரிணி”

   

”ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க”

   

”இல்லை டென்ஷன் ஆகாத, இதுநாள் வரை இளங்கோவை மனசுல நினைச்சிக்கிட்டு என்கூட வாழ முடியாம கஷ்டப்பட்டு வாழ்ந்துக்கிட்டு இருந்த, இப்ப உன் முகத்தையும் உன் செயல்களையும் பார்க்கறப்ப ஒருவழியா நீ இளங்கோவை மறந்துட்டு என்னை நினைக்க ஆரம்பிச்சிட்டேன்னு தெளிவா தெரியுது, இது போதும் ஹரிணி இப்படியே இரு மாறிடாத” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு தலையை பலமாக ஆட்டிவிட்டு

   

”ஓகே தருண் நான் என் வேலைகளை பார்க்கறேன் ஆமா நீங்க எங்க இருந்து பேசறீங்க“

   

”வீட்ல இருந்துதான்”

   

”வீட்லயா ஹால்லயா இருக்கீங்க“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.