(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

இந்த வீட்ல எந்த இடத்திலயும் இருக்க கூடாது” என அவன் சொல்லியபடியே இளங்கோவின் போட்டோ முதல் அவன் பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் எடுத்து ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு ஏதோ பெரிய சாதனையை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் தத்தளித்தான்.

   

ஹரிணியோ ஆபிசுக்கு சென்றதும் தனது பென்டிங் வேலைகளை முடித்துவிட்டு தருண் என்னதான் செய்கிறான் என தெரிந்துக் கொள்ள செல்போன் மூலம் வீட்டில் இருந்த கேமராவை பார்த்து அதிர்ந்தாள். இருளான அறை தெரிய அவளுக்குத் திக்கென்றது

   

”என்னது இது கேமரா இருக்கறதை கண்டுபிடிச்சிட்டான் போல இருக்கே, போச்சி இப்ப வசமா மாட்டிக்கிட்டோமா, என்ன செய்றது கடவுளே சே போட்ட திட்டம்லாம் வீணாயிடும் போல இருக்கே இப்ப என்ன செய்றது” என பலமாக யோசித்து இறுதியில் தருணுக்கு போன் செய்தாள்

   

”ஹலோ தருண்” என அச்சத்துடன் பேச அவனோ உற்சாகமாக

   

”என்ன ஹரிணி இந்நேரம் போன் பண்ணியிருக்க, என்னாச்சி என் நினைப்பாவே இருக்கியா”

   

”ஆமாம் தருண் ஆமா என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க”

   

”நானா சும்மாதான் இருக்கேன் பொழுது போகலை, டிவிதான் பார்க்கிறேன் ஆமா நீ என்ன செய்ற”

   

”பென்டிங் வேலைகளை முடிச்சிட்டேன், புது ப்ராஜெக்ட்கான ப்ரசன்டேஷன் ரெடி பண்ணனும், இனிமேல ஆரம்பிச்சா எவ்ளோ நேரம் ஆகுமோ அதான் போன் பண்ணேன்“

   

”ஓ அப்ப நைட் லேட்டா வருவியா”

   

”ஆமாம் தருண் அதை சொல்லத்தான் போன் பண்ணேன் ஆனாலும்”

   

”என்ன விசயம் சொல்லு“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.