”ஆமாம் சோபால உட்கார்ந்து டிவி பார்த்துக்கிட்டு இருக்கேன்”
”உங்க பின்னாடி சுவத்தில இளங்கோவோட போட்டோ இருந்ததே, என்னாச்சி சுவரே காலியா இருக்கு” என பதட்டமாக கேட்க அவனோ
”இதப்பாரு ஹரிணி நாம வாழ தொடங்கிட்டோம், இனியும் இளங்கோவோட போட்டோ எதுக்கு இருக்கனும், அவனைப் பார்க்கறப்பலாம் நீ மனசளவு கஷ்டப்படறது எனக்கு சுத்தமா பிடிக்கலை அதான் இளங்கோ சம்பந்தப்பட்ட போட்டோல இருந்து எல்லா பொருளையும் எடுத்து ஒரு ரூம்ல போட்டு மூடிட்டேன், இனி அவன் நினைப்பு உனக்கு எப்பவும் வராது”
”ஓ அப்படியா ஆக்சுவலா நானே இதை உங்ககிட்ட சொல்லனும்னு இருந்தேன்“
”அப்படியா”
”ஆமாம் தருண் குழந்தை வரைக்கும் நாம ப்ளான் பண்ண ஆரம்பிச்ச பின்னாடி இளங்கோவோட திங்ஸ் எல்லாம் எதுக்கு வைச்சிக்கனும், நாளைக்கு பின்னாடி குழந்தை பிறந்து அதுங்க வளர்ந்து இளங்கோ யாருன்னு கேட்டா எனக்கு சங்கடமாகிடும், வீணா பிரச்சனை வரும் அதனால நானே அதை எல்லாம் ரிமூவ் பண்ணிடலாம்னு இருந்தேன், பட் என்னால அது செய்ய முடியாதுன்னு என் உள் மனசு சொல்லிச்சி, சரி உங்ககிட்ட சொல்லி அதை எல்லாம் க்ளியர் செய்யலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன், அதுக்குள்ள நீங்களே செய்துட்டீங்க ரொம்ப தாங்ஸ் தருண் இப்பதான் என் மனசு நிம்மதியா இருக்கு”
”உன் மனசு எனக்கு தெரியாதா ஹரிணி, நீ சொல்ற வரைக்குமா நான் விட்டு வைச்சிருப்பேன், நான் யாரு உன்னோட கணவன்”
”ஆமாம் உங்களை போல இளங்கோ என்னிக்குமே இருந்ததில்லை”
”அப்படியா” என்றான் ஆச்சர்யமாக
”ஆமாம் இளங்கோ எப்பவும் சென்டிமென்ட் டைப் ஆனா, நீங்க ப்ராக்டிக்கலா யோசிப்பீங்க,