”தெரியலை ரொம்ப வலிக்குது இப்பதான் தலைவலி மாத்திரை போட்டேன் அது என்னடான்னா தூக்கத்தை வரவழைக்குது, நான் தூங்கறேன் ப்ளீஸ்”
”இல்லை அது வந்து”
”என்ன சொல்லு”
”குழந்தை”
”பார்த்துக்கலாம் ஹரிணி என்னால முடியலை சாரி குட்நைட்” என சொல்லிவிட்டு உறங்கிப் போனான் தருண்
மறுநாள் இரவும் ஹரிணி ஆசையாக அவனிடம் செல்ல கால் வலி என்றான்
அடுத்த நாள் இடுப்பு வலி என்றான் அதற்கடுத்த நாள் முதுகுவலி என்றான் இப்படியே வரிசையாக ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி நாட்களை கடத்தினான்.
அதில் பொறுக்க முடியாமல் ஒரு நாள் இரவு ஹரிணி அவனிடம் சண்டை போட்டாள்
”தருண் இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒண்ணு சொல்லி என்னை அவாய்டு பண்ற”
”சே சே அப்படியில்லை இப்ப பாரு என் வயிறு கடமுடங்குது, வயிறு கலக்குது புட் பாய்சன் ஆயிடுச்சி போல, இது போல சமயத்தில எப்படி நாம ஒண்ணா இருக்கறது வேணாம் நாளைக்கு பார்த்துக்கலாம்“
”நாளைக்கு நாளைக்கு நாளைக்கு இப்படித்தான் ஒரு மாசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க, என்னாச்சி தருண் உங்களுக்கு, நானும் மாறிட்டேன், இளங்கோவை சுத்தமா மறந்துட்டு உங்களோட வாழ வந்துட்டேன் ஆனா நீங்க என்னை அவாய்டு பண்றீங்க ஏன்”