”ஆபிஸ்“
”இன்னிக்கு லீவு எடுத்துக்க ப்ளீஸ் எனக்காக வா, நான் உனக்கு பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன்”
”என்ன இடம் தருண்”
”நீ வந்து பாரு சந்தோஷப்படுவ வா வா” என அவளை அழைத்துக் கொண்டு அவளின் காரில் அவனே ஓட்டியபடி ஒரு அநாதை ஆசிரமத்தை அடைந்தான்.
ஆசிரமத்தைக் கண்டு வியந்தாள் ஹரிணி
”இங்க எதுக்காக கூட்டிட்டு வந்தீங்க தருண்”
”விசயமாதான் வா வா” என அவளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்துக்குள் சென்றான் வயது வாரியாக குழந்தைகள் அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருக்க அந்த குழந்தைகளை கண்டு மனம் மகிழ்ந்தாள் ஹரிணி. அவளின் மகிழ்ச்சியைக் கண்டு தருணும் மகிழ்ந்தான்
”குழந்தைகள் அழகாக இருக்காங்கள்ல ஹரிணி”
”ஆமாம் தருண்”
”உனக்கு இதுல எந்த குழந்தையை பிடிச்சிருக்கு”
“எல்லா குழந்தையையும் பிடிச்சிருக்கு”
”யாராவது ஒண்ணை சொல்லு”
”ஓ அப்படியா அப்படின்னா அதோ அந்த குழந்தை ரொம்ப க்யூட்டா அழகா இருக்குல்ல“