”உன் மனசு என்ன இவ்ளோ கல்நெஞ்சா இருக்கே, பாவப்பட்ட குழந்தைக்கு அடைக்கலம் தரக்கூட இப்படி யோசிக்கற, உன்னோட மென்டாலிட்டியே தப்பா இருக்கு”
”சாரி தருண் நீங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை, இப்பவும் சொல்றேன் எனக்கு குழந்தை வேணும், இப்படியில்லை உங்களுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைதான் வேணும், அதுக்கு அப்புறம் 2வது குழந்தையா இங்க வந்து ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம், நான் உறுதியா சொல்றேன் தத்து எடுத்த குழந்தையா இருந்தாலும் பாகுபாடு பார்க்காம இரண்டு குழந்தைகளையும் நான் வளர்ப்பேன், என்னை நம்புங்க தருண்” என சொல்ல தருணுக்கு கோபம் அதிகமானது
”சொன்னா புரிஞ்சிக்க ஹரிணி வா ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிட்டு கிளம்பலாம் வா” என அவளின் கையை பிடித்து இழுக்க அவளுக்கு கோபம் வந்தது
”முதல்ல என் மேல இருந்து கையை எடுங்க தருண்“
”முடியாது”
”எடுங்கன்னு சொல்றேன்ல”
”வரப்போறியா இல்லையா”
”விடுங்க தருண்” என அவனது கையை தட்டிவிட்டு விலகி நின்றாள். அந்த கணம் அவனின் கோபம் தலைக்கேறியது
”எனக்கு உங்க மூலமாதான் குழந்தை வேணும்” என்றாள் திடமாக, அதைக்கேட்டு அவனின் இயலாமை அவனை கேலி செய்தது, தன் மீதிருக்கும் குறையை மறைக்க முடியாமல் ஹரிணியை எதிர்கொள்ள இயலாமல் பிபி அதிகமாகி கோபம் தலைக்கேறி ஹரிணியின் கையை பிடித்து முறித்தான். அதில் அவளுக்கு வலி அதிகமாக அலறினாள் அவளின் அலறலை நிப்பாட்ட எண்ணி அவளின் வாயை ஒரு கையால் பொத்தி