”ப்ளீஸ் தருண்”
”நாளைக்குங்கறேன்ல விடு” என கோபமாக சொல்லிவிட்டு அவன் வெளியேறிச் சென்றுவிட ஹரிணிக்கு சிரிப்பு சிரிப்பாக இருந்தது
”அய்யோ பாவம் இவன் நிலைமை இவ்ளோ மோசமாகுதே, அதை இன்னும் மோசமாக்கிடனும், இன்னும் ஜாலியா இருக்கும்” என நினைத்துக் கொண்டாள்
மறுபக்கம் தருணோ
”என்னாச்சி இந்த ஹரிணிக்கு மூச்சுக்கு முன்னூறு முறை குழந்தை குழந்தைன்னு சொல்லி நம்மளை கொல்லாம கொல்றாளே சே நம்மால முடியாத விசயத்தைதான் இந்த பொண்ணுங்க எதிர்பார்ப்பாங்க, பவானியும் இப்படித்தான் குழந்தை வேணும்னு தொல்லை பண்ணா கடைசியில எனக்கு ஆண்மையில்லைன்னு தெரிஞ்ச பின்னாடி அவள் என்னை வெறுக்க ஆரம்பிச்சிட்டா, என்கூட தினமும் சண்டை போட்டா, கடைசியில செத்தும் போயிட்டா அவளை போல இவள் ஆகக்கூடாது, ஆகவும் விடமாட்டேன், இப்ப என்ன குழந்தைதானே நாளைக்கே அவளை அநாதை ஆசிரமத்துக்கு கூட்டிட்டுப் போய் குழந்தையை தத்து எடுத்துக்கிட்டு வந்துடலாம், அதை கொடுத்து ஹரிணியை சமாதானம் செய்யலாம் ஆனா, இதுக்கு ஹரிணி ஒத்துக்குவாளா டவுட்தான் ஒத்துக்க வைக்கிறேன்” என நினைத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் ஹரிணி ரெடியாகி வர தருண் அவளை நிப்பாட்டினான்
”ஹரிணி உன்கூட கொஞ்சம் வெளிய போகனும் வர்றியா”
”எங்க தருண்”
”சொல்றேன் வா போகலாம்”