”என்னால உனக்கு குழந்தை தர முடியாதுடி, ஒழுங்கு மரியாதையா ஒரு குழந்தையை தத்து எடு” என மிரட்ட அவளோ முடியாது என்பது போல் தலையாட்ட அவனின் கோபம் வெறியாக மாறி சட்டென அவளின் கன்னத்தில் ஒரு அறை விட்டான். அந்த அறையில் அவள் தள்ளாடி நின்றாள். அவளை அடித்த பிறகு ஏதோ பெரிய சுமையை இறக்கிவிட்டது போல மகிழ்ந்தான் அவனின் முகத்தில் தெரிந்த சிரிப்பைக் கண்டதும் ஹரிணிக்கு பவானியின் நினைவே வந்தது
”பவானியை கூட இப்படித்தானே சைக்கோ தனமா டார்ச்சர் செய்திருப்பான் ஆனா, நான் பவானி போல எல்லாத்தையும் பார்த்து பொறுத்துக்கிட்டு போக மாட்டேன் நான் யார்ன்னு இவனுக்கு காட்டறேன்” என நினைத்து உடனே அவனை கோபமாக பார்த்து அவனை ஒரு அறை கன்னத்தில் விட்டாள் ஹரிணி. அவனின் அடியை விட அவளின் அடியில் பலமும் வேகமும் இருந்தது, அடித்த அடியில் அவளாவது தள்ளாடி நின்றாள் தருணோ தள்ளாடி தரையில் விழுந்தான். அவ்வளவு நேரம் இவர்களது செயல்களை கவனித்தபடி இருந்த அங்கிருந்த ஆசிரமத்து குழந்தைகள் ஹரிணியை தருண் அடித்த போது வருந்தினார்கள் அதே ஹரிணி தருணை திருப்பி அடித்தப்போது கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள்.
குழந்தைகளின் இந்த ஆரவாரத்தைக் கண்டு திடுக்கிட்ட தருண் ஹரிணியை பார்க்க அவளோ பத்ரகாளி போல நின்றிருந்தாள். தருண் ஒருநிமிடம் தான் தவறு செய்துவிட்டோம் என நினைத்து உடனே அவளிடம் சரண்டர் ஆக வர அவளோ அவனை ஒதுக்கிவிட்டு தான் வந்த காரில் ஏறி சென்றே விட்டாள், அவள் சென்றதும் தருணுக்கு மூளை குழம்பியது
”இவள் நாம நினைச்ச மாதிரியில்லை, அழகா இருக்கா, அன்பா நடந்துக்கறாள்ன்னு நம்பி ஏமாந்துட்டோம் இவள் நிவேதினி போல காதல் காதல்ன்னு அலையறவளும் இல்லை, பவானியை போல விட்டுக்கொடுத்து பொறுமையா போறவளும் இல்லை, இவளோட ஒரு அடியே இவளோட பலத்தை காட்டிடுச்சி, இனிமேலயும் இவள்கிட்ட நாம கடுமையா நடந்துக்கிட்டா நமக்குதான் நஷ்டம், வேற வழியில்லை நடந்த உண்மையைச் சொல்லி எப்படியாவது இவள் மனசை கலைச்சி விடனும், என்னதான் நம்ம மேல கோபம் இருந்தாலும் அவளும் தமிழ்பொண்ணுதானே, கண்டிப்பா புருஷனை விரட்டிடமாட்டா, இவளுங்க சாகறவரைக்கும் ஒரு ஆம்பளைக்கு அடிமையாதான் வாழ்ந்து சாகனும் அது பொம்பளைங்களோட தலையெழுத்து, அதுல ஹரிணி மட்டும் என்ன விதிவிலக்கா” என