நானும் யதார்த்தவாதிதான் அடிக்கடி எனக்கும் இளங்கோவுக்கும் சண்டை வரும், அவன் எப்ப பாரு சென்டிமெண்டாவே பேசி வைப்பான் அது எனக்கு சுத்தமா பிடிக்காது”
”அவன் கிடக்கறான் சென்டிமென்ட் ஃபூல், விட்டுத்தள்ளு நான் இருக்கேன் உனக்கு”
”ஓகே தருண் பை பை” என சொல்ல அவனோ பை சொல்லி போனை கட் செய்ததும் ஹரிணியோ கோபத்தில் வெடித்தாள்
”ராஸ்கல் யாரை கேட்டுடா இளங்கோவோட பொருளை அறையில வைச்சி பூட்டின, முதல்ல உன்னை அறையில வைச்சி பூட்டியிருக்கனும், உன்னை போல சைக்கோவை வெளிய விட்டது, தப்பு இருக்கட்டும் உன்னை அணுஅணுவா சித்ரவதை செய்றேன், குழந்தைன்னு பேச்சு எடுத்தாலே உனக்கு கோபம் வருதுல்ல, இனி பாரு தினமும் அதைப் பத்தியே பேசப் போறேன், நீயா வாய்திறந்து உன் இயலாமையை சொல்ற வரைக்கும் ஓயமாட்டேன்” என மனதில் நினைத்தபடியே ஆபிஸ் வேலைகளை செய்யலானாள்
மாலை நேரம் ஆபிஸ் முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் பொம்மை கடைக்குச் சென்று ஏகப்பட்ட பொம்மைகளை வாங்கிக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள்.
கையில் ஏகப்பட்ட பொம்மைகளுடன் வந்திறங்கிய ஹரிணியை கண்டு தருண் கோபித்துக் கொண்டான்
”எதுக்கு இவ்ளோ பொம்மைங்க”
”குழந்தைக்காக தருண்”
”குழந்தையா ப்ச் ஹரிணி வீட்ல குழந்தையே இல்லை, இப்ப எதுக்காக பொம்மை வாங்கின”
”என்னவோ தெரியலை வர்ற வழியில பொம்மை கடை பார்த்தேன், அவ்வளவுதான் என் மனசு என் பேச்சை கேட்கலை, கடகடன்னு வண்டியை விட்டு இறங்கி கடைக்குப் போய் பார்க்கற பொம்மையெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் எப்படியிருக்கு தருண்” என கேட்க அவனோ