“கலாய்க்காதீங்க சித்தி”
“சரி யாருக்காக காத்திருக்க”
“அர்ஜூன்காக”
“ஏன்”
“வரேன்னு சொன்னான். அதான் இங்க ரொம்ப போரடிக்குது சித்தி”
“வீட்லதான் பொண்ணுங்க இருக்காங்களே அதுல யாருகூடவாவது பழகினா பொழுது போயிடும்”
”முடியாது இந்த பொண்ணுங்களோட பேசறதாவது ம்ஹூம்”
“ஏன்னடா இது அதிசயமா இருக்கே ஹால்ல வெட்டியா உட்கார்ந்துக்கிட்டு யாராவது வாங்க என்கூட பேசுங்கன்னு கத்துவ இப்ப தானா 3 பொண்ணுங்க வந்திருக்காங்க பேசமாட்டேன்னா எப்படி”
“சித்தி அவங்களா வந்து பேசினா நான் பேசப்போறேன் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அதுக்காக நானா அந்த பொண்ணுங்க கிட்ட போக மாட்டேன்”
“ஏன்டா அப்படி”
“ஆமா நான் போனா அலையறான் பாரு பொம்பளை பொறுக்கின்னு சொல்றதுக்கா சித்தி”
“அதுவும் சரிதான் சரி சரி வா மாமா உன்னை கூப்பிடறாரு வா”
”ஏன் என்னவாம் அவருக்கு”
Why chillzee team,
No updates for the past few days....
Very boring without Stories