(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“நானும் வாங்கினேனே இரு” என சொல்லி பையை வாங்கிப் பார்த்தால் அதில் தேவா வாங்கிய புடவை இல்லை உடனே தாஸை பார்த்து முறைத்தான்

   

”இது உன் வேலையாடா” என கேட்க அவனோ இல்லை என தலையில் அடித்து சத்தியம் செய்ய

   

”அப்ப நான் வாங்கின புடவை எங்கடா” என கேட்க அவன் தெரியாது என சொல்லிவிட்டு யோசித்தான். தேவாவும் குழம்பி போய் தவித்து பின் சரண்யா நினைவுக்கு வரவே தெளிவானான். உடனே கீர்த்தனாவிடம்

   

”நீ கவலைப்படாத உன் புடவை என் வீட்ல இருக்கு, கொண்டார மறந்துட்டேன் நீ இப்படி திடுதிப்புன்னு வர சொல்வேன்னு தெரியாம போச்சி. காலையில கோயில்ல கொடுக்கறேன், அதை கட்டிக்கிட்டு ஆபிசுக்கு வா இப்ப கிளம்பு உன்னை வீட்ல விட்டுடறேன்”

   

“இப்பவே போகனுமா” என அவள் இழுக்க தாஸோ அவளிடம் வந்து உலுக்கி அவள் கையை பிடித்து இழுத்து எழுப்பி அவளிடம்

   

”ஒழுங்காயிரு” என்பது போல் சைகை செய்ய அவள் சிரிக்கவும்

   

தாஸ் தேவாவை காட்டி

   

”இவர் வேணாம்” என சொல்ல அதற்கும் அவள் வெட்கத்துடன் சிரிக்கவும் தலையில் அடித்துக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல தேவாவிற்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே வந்தான். காரில் ஏறிய மூவரும் சீக்கிரமாகவே அவர்கள் வீடு இருந்த தெருவை அடைந்தார்கள்.

   

தெரு முனையில் கீர்த்தனாவை இறக்கிவிட்டவன், காரை எடுக்காமல் அவள் வீடு வரை சென்றதும் பின் காரை ஓட்டிக் கொண்டு தன் வீட்டை அடைந்தான். வீட்டுக்குள் சென்றவன் நேராக சரண்யாவை தேடிச் சென்றான். அங்கு அவள் போனில் யாருடனோ பேசுவதைக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.