(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“ம்” என்று மட்டும் சொன்னான். அதற்குள் அவனது தந்தை கைலாசநாதன் அங்கு வந்தார்

   

”தேவா இன்னிக்கு உனக்கு எந்த வேலையிருந்தாலும் தள்ளி வைச்சிடு”

   

“என்ன விசயம்?”

   

“இன்னிக்கு அந்த சரண் ஹாஸ்டல் கட்டற இடத்தை பார்க்க வரான். அவனுக்கு நாம அந்த இடத்தை காட்டனும்னு நேத்தே கேட்டான். உனக்கு ஒரு விசயம் தெரியுமா, அவன் வரும் போதே ஹாஸ்டலுக்காக மாடல் ப்ளான் வரைஞ்சி எடுத்துட்டு வந்தான். நேத்தே காட்டினான். இன்னிக்கு அந்த காலேஜ் ஓனர்கிட்டயும் காட்டனும்னு சொன்னான். அதுக்காங்க நாங்க போறோம் 10 மணிக்கு மீட்டிங் இருக்கு நீயும் வந்துடு”

   

“இல்லைப்பா நான் கட்டற இடத்தில வேலையிருக்கு, அதை நான் இன்னும் 2 நாள்ல முடிக்கனும் கடைசிக்கு வந்தாச்சி. இப்பதான் நான் அங்க இருக்கனும் என்னால வரமுடியாது”

   

“இப்படி சொன்னா எப்படி தேவா”

   

“அந்த மீட்டிங்குக்கு நான் வந்து என்ன செய்யப் போறேன்”

   

“அன்னிக்கு நம்ம வீடு தேடி சில பேர் பிரச்சனை பண்ணி சண்டைக்கு வந்தாங்க தெரியுமா”

   

“யார் வந்தாங்க?”

   

“ம் எல்லாம் இந்த ஊரு கன்ஸ்ட்ரக்ஷன்காரங்கதான். அந்த ஹாஸ்டல் கட்டறது அவங்க கைவிட்டு போக கூடாதுன்னு இங்க வந்து தகராறு பண்ணாங்க, நல்லவேளை அந்நேரம் சரண்யா வந்து அவங்களை பேசி விரட்டிட்டா ஆனா இன்னிக்கு ஹாஸ்டல் கட்ட வேண்டிய காலி இடத்திலதான் மீட்டிங் இருக்கு, அங்க வந்து தகராறு செஞ்சா நான் என்ன செய்றது“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.