“இல்லை எப்பவும் என் அண்ணன் என்னை பார்த்துட்டுதான் எல்லா முக்கிய வேலையும் செய்வாரு, என் முகராசியால் அவருக்கு எல்லா வேலையும் வெற்றியா முடியுமாம்”
“ஓ அப்படியா இரு நானும் உன்னை பார்க்கறேன் ஏதாவது வெற்றி நடக்குதான்னு பார்க்கலாம்” என அவளையே உன்னிப்பாகப் பார்த்தான். அவளது கண்கள், கன்னம், உதடுகள் என இன்ச் பை இன்ச்சாக பார்க்க அவளோ வெட்கத்தில் கன்னம் சிவக்கவும் அவனோ
”இந்த பொண்ணுங்க அதிகமா மேக்கப் பண்ணிக்கிட்டு ஒரிஜினல் முகத்தை காட்டமாட்டேங்கறாங்க தாஸ்” என சொல்ல அவளோ
“நான் மேக்கப் போடலையே”
“அப்படியா அப்ப கன்னத்துக்கு மட்டும் ரோஸ் பவுடர் அப்பிக்கிட்டியா ரோஸா இருக்கு” என சொல்ல அவள் வெட்கத்தில் தலை குனியவும் தாஸ் தேவாவை உலுக்கினான்.
”என்னடா” என கேட்க அவன் வா என சொல்ல அவனும் கிளம்பி கோயிலுக்குச் சென்றான். அங்கிருந்த கீர்த்தனா தேவாவிடம்
”புடவை எங்க”
“அது மறந்துட்டேன்”
“என்னையா புடவையையா”
“சீ சீ இல்லை ஒரே வேலை அதான் இன்னும் 2 நாள்ல ஒரு வீடு முடியுது. 2 நாள் கழிச்சி பாரு வேலையில்லாம வெட்டியா உன்கிட்டயே இருப்பேன் சரியா இப்ப கிளம்பு”
“இப்பதானே வந்தீங்க அதுக்குள்ள விரட்டறிங்க”