(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

ஹாஸ்டல் வைக்காமல் ஒரு தெருவிற்கு அடுத்த தெருவில் இருந்த பல ஏக்கர் காலி இடத்தில் ஹாஸ்டல் கட்ட முடிவு செய்தார் காலேஜ் ஓனர் சிதம்பரம்.

   

அங்கு மீட்டிங்குக்காக திறந்த வெளியில் ஷாமியானா போடப்பட்டு, அதற்கு கீழ் டேபிளும் சேர்களும் போடப்பட்டது. சரியாக 10 மணிக்கு டாக்சியில் வந்து இறங்கினான் சரண் கூடவே பாடிகார்டுகள் இருந்தார்கள். அவன் வருவதற்கு முன்பே தேவாவின் அப்பா, சித்தப்பா, மாமா இன்னும் சில பேர் கூடிவிட்டார்கள்.

   

 50 வயது மதிக்கத்தக்க காலேஜ் ஓனர் சிதம்பரமும் அங்கு இருந்தார் மீட்டிங்குக்கு தலைமை தாங்கினார். சரண் வரவும் மீட்டிங் ஆரம்பித்தது. சரணின் ஆங்கில மொழி பேச்சில் கவர்ந்தார் சிதம்பரம். அவன் கொண்டு வந்த 3 மாடல்களை அவரிடம் காட்டி விளக்க அவரும் அதைப் பார்த்து பிரமித்தார்

   

”ரொம்ப நல்லாயிருக்கு, நான் நினைச்ச மாதிரியே யாரும் கட்டாத மாதிரி ஹாஸ்டல் கட்டனும்னு இருந்தேன். அது இப்பதான் நடக்குது. இந்த 3 மாடலுமே நல்லாயிருக்கு இதுல எது தேர்ந்தெடுக்கப் போற சரண்” என கேட்க அவனோ

   

”இந்த 3 ஹாஸ்டல் மாடலுமே நான் பாரின்ல படிச்சப்ப, அங்க கட்டப்பட்ட ஹாஸ்டல் மாடல்கள் சரி நீங்க புதுசா மாடர்னா நவீன வசதிகளோட கட்டனும்னு சொன்னதால பாரின்ல இருந்த டைப்ல ப்ளான் ரெடி பண்ணேன். இங்க இருக்கற காலி இடத்தைப்பார்த்தா ஒரு மாடல்தான் கட்ட முடியும், அதுவும் இதுதான்” என அவன் அமைதியாக அதேசமயம் தெளிவாக மீண்டும் விவரிக்கலானான். 

   

அந்த ப்ளானை காட்டி அப்படியே அங்கிருந்த காலியிடத்தை காட்டி எங்கு என்ன எது வரும் என்பதை விளக்கமாக சொல்ல அதைக்கேட்டு பிரமித்தார்கள் மற்றவர்கள். அதில் கைலாசநாதன் சரணை மெச்சிக் கொண்டார்

   

”என் நண்பனுக்கு பொண்ணுதான்னு சொன்னான் ஆனா இவ்ளோ புத்திசாலியான பையன் இருக்கான்னு சொல்லலையே”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.