கையெழுத்தாயிடுச்சி வேணா பார்த்துக்குங்க.
நம்ம ஊர்ல வெளியூர்க்காரன் கட்ட வரலை. நாமதான் கட்டறோம் போதுமா அவங்களை வேலை செய்ய விடுங்க” என சொல்ல வந்தவர்களும் கைலாசநாதனை பார்க்க அவர் ஒரு அக்ரிமெண்ட்டை காட்ட அதை வாங்கிப் படித்தார்கள்.
அதில் பளான் வரைந்த காரணத்தாலும் அங்கேயே தங்கி ஹாஸ்டலை கட்டும் இன்ஜினியர் வேலை செய்வதாலும் 20 சதவீதம் ஷேர் சரணுக்கும், ஹாஸ்டல் கட்ட வேலை செய்வதால் கைலாசநாதனுக்கு 50 சதவீதம் ஷேர் என்றும் அதற்கு உதவி புரிவதால் விசுவநாதனுக்கு 30 சதவீதம் ஷேரும் ஒதுக்கப்பட்டது.
இந்த ஷேர் தொகையே பல கோடிகளைத் தாண்டும். இருந்தாலும் நம்ம ஊர்காரன் வேலை செய்வதால் வந்தவர்களும் உடனே சரணிடம் மன்னிப்புக் கேட்டு கலைந்து சென்றார்கள். வந்த 5 நிமிடத்தில் முழு பிரச்சனையும் முடித்த தேவாவின் திறமையைக் கண்டு மெச்சினான் சரண். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்த தேவாவோ சரணிடம் தனியாக
”உன் தங்கச்சியை ஓட்டல்ல விட்டுட்டு நீ இங்க என்ன செய்ற”
“ஓ அதுவா அது வந்து”
“என்ன வந்து அன்னிக்கு ஏதோ ஓட்டல்ல தங்க வைக்க பயப்பட்டு என் வீட்ல விட சொன்ன இப்ப எப்படி”
“அவள் ஷாப்பிங் போயிருக்கா இல்லை அவள் டிக்கெட் எடுக்க போயிருக்கா”
“எதுக்கு”
“அவளை ஊருக்கு அனுப்பலாம்னு இருக்கேன்”
“ஏன் ஒரே நேரத்தில 2 இடத்தில இருக்கறது கஷ்டமா உனக்கு” என கேட்டுச் சிரிக்க