கைலாசமோ
”எனக்கு வேற 2 இடத்தில கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்காங்க ஆளுங்க எல்லாம் பிசியா இருக்காங்க உடனே முடியாது” என சொல்ல
”அப்ப எப்ப செய்வீங்க பூமி பூஜைக்காவது இடம் தோண்டியிருக்கனும்ல, இப்பவே இந்த காலிஇடத்தை பாருங்க எப்படியிருக்குன்னு இதை சுத்தம் செய்யவே 1 வாரம் பிடிக்குமே” என சொல்ல சேதுப்பிள்ளையின் பார்வை தேவாவின் மீது படிந்து பின் ஓனரிடம்
”அதைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க, இந்த தேவா இருக்கான்ல அவன்கிட்ட வேலை செய்றவங்க எல்லாம் திறமையானவங்க, 1 வாரத்துக்கான வேலையை 4 நாள்ல செஞ்சி முடிப்பானுங்க அவனோட வேலைக்காரங்க அவங்களை விட்டா எல்லாம் செஞ்சிடப் போறாங்க” என சொல்ல அதிர்ந்தான் தேவா
”மாமா என்ன நீங்க இப்படி சொல்றீங்க 2 நாள்ல நான் கட்டற வீடு முடிக்கனும். என் ஆளுங்க எல்லாரும் அதுல இருக்காங்க அதை என்னால விடமுடியாது”
“விடாத தேவா, 2 நாள் கழிச்சி வந்து இங்க வேலை செய்யச் சொல்லு”
“அவங்களுக்கு நான் 1 வாரம் லீவு தரனும் மாமா”
“தாராளமா தாப்பா இங்க பூமி பூஜை முடிஞ்சதும் உடனே வேலை ஆரம்பிக்க மாட்டோம். ப்ளான் படி தேவையான இடங்களை மார்க் பண்ணுவோம், அப்புறம் இந்த நகராட்சி வேலைங்க இருக்குல்ல, அதான் போர் போடறது, மின்சாரம் கொண்டு வர்றது அதெல்லாம் செய்யனும், இந்த இடத்தில கட்டிடம் கட்ட அப்ரூவல் வாங்கனும் அதுக்கே ஒரு வாரம் ஓடிடும். அந்த ஒரு வாரத்தை லீவா கொடுத்துடு, அப்புறம் செங்கல், ஜல்லி, கம்பி எல்லாம் இறக்கனும் அப்ப இருந்து அவங்க வந்தா போதும். அதுக்குள்ள உன் அப்பா கட்டற இடமும் முடிஞ்சிடும், அப்புறம் அவங்க வந்த பின்னாடி உன் ஆளுங்களை நீ திருப்பி எடுத்துக்க” என சொல்ல அவனோ சரணை பார்த்துக் கொண்டே
”சரி மாமா ஆனா இங்க வேலை செய்றவங்களுக்கு நீங்கதான் சம்பளம் தரனும்”