காபி கொட்டிக்கிச்சி”
“அடிப்பாவி” என தேவா கத்த அவளோ
”என்னாச்சி”
“நான் ஆசையா வாங்கின முதல் புடவையில ஏன் காபியை கொட்டின, உன்னால அதை பத்திரமா பார்த்துக்க முடியலைன்னா எதுக்கு உனக்கு புடவை” என கத்த தாஸ் தேவாவை அமைதியாக்கினான்
”புடவைதானே இன்னொன்னு வாங்கிக்க”
“ம்க்கும் வாங்கறேன் வாங்கறேன் உன் அண்ணன் என் உயிரை எடுக்கறதுக்குள்ள நீ எடுத்துடுவ போல” என திட்டிக் கொண்டே சொல்ல அவளோ சிரித்தாள். அந்த சிரிப்பில் கடுப்பானவன் நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
வீட்டில் அவளை இறக்கிவிட்டு நடந்தே கோயிலுக்குச் சென்றான். அங்கு கோயிலில் பவியும் கீர்த்தனாவும் இருப்பதைக் கண்டு மெல்ல கோயிலை சுற்றி விட்டு மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் தியானம் புரிந்து விட்டு அவசரமாக வீட்டுக்கு வந்தான். அங்கு பாட்டி ஒரு நகைக்கடையை வீட்டுக்கு கொண்டு வந்திருந்தார்.
பெண்கள் சுற்றிலும் அமர்ந்து நகைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதில் சரண்யாவும் இருந்தாள். தேவா வரவும் மென்மையான புன்னகையை அவனிடம் வீசிவிட்டு தலை குனிந்து நகைகளை பார்க்கவே அதிர்ந்த தாஸோ தேவாவை உலுக்க
”இருடா என்ன விசேஷம்னு தெரியலை வா கேட்போம்” என எதுவும் புரியாமல் தேவாவும் பாட்டியிடம்
”என்ன பாட்டி நகைக்கடையே வீட்டுக்கு வந்திருக்கு என்ன விசயம்”
”நகை எடுக்கத்தான் இதப்பாரு இது எப்படியிருக்கு” என அவர் ஒரு நகையை காட்ட