“புரியுது நீங்க அக்ரிமெண்ட் ரெடி பண்ணுங்க, நான் படிச்சி பார்த்துட்டு சரியா இருந்தா கையெழுத்துப் போடறேன்”
“உங்களுக்கு ஏதாவது பாயின்ட்ஸ் இருந்தா சொல்லுங்க அதை அப்படியே சேர்த்துடலாம்” என சொல்ல
”அப்ப மாதிரி அக்ரிமெண்ட் கொண்டு வாங்க நானும் ஒரு அக்ரிமெண்ட் தயாரிக்கிறேன் அதுல இந்த சரண் பேரும் இருக்கட்டும் நீங்க நான் சரண் மூணு பேரும் கையெழுத்துப் போடலாம்” என சொல்ல அதற்கு அனைவரும் ஒப்புக் கொண்டார்கள்.
அடுத்து சரண் அனைவரிடமும் சொல்லிவிட்டு தனது ப்ளான் மற்றும் அனைத்து பொருட்களையும் செக்யூரிட்டிகளிடம் தந்துவிட்டு தேவாவுடன் வண்டியில் ஏறி ஓட்டலில் இறங்கியவள்
”இங்கயே இருங்க நான் என் தங்கச்சியை அனுப்பறேன்”
“இவ்ளோ சீக்கிரம் அவள் வந்திருப்பாளா”
“வந்திருப்பா” என சொல்ல
”சரி கூப்பிடுங்க” என சொன்னான். அவனும் உள்ளே சென்ற 10 நிமிடம் கழித்து சரண்யா வெளியே வந்தாள். வேறு உடை அணிந்திருந்தாள். அதைக் கண்டதும் சிரித்தான் தேவா. தாஸ் குழம்பினான். வண்டியில் ஏறியதும்
”என்ன சரண்யா ஓட்டலுக்குள்ள போறப்ப ஒரு ட்ரஸ், வெளிய வர்றப்ப ஒரு ட்ரஸா நீ காலையில புடவைதானே கட்டியிருந்த எப்படி புடவை சுடிதார் ஆச்சி” என கேட்க சரண்யா பயந்தாள்
”அது எதுக்கும் இருக்கட்டும்னு அண்ணா ரூம்ல ஒரு செட் வைச்சிருந்தேன். புடவையில