அவனுக்கு வேர்த்துவிட்டது
”என்ன சொல்றீங்க எனக்கு புரியலை.
”ஒண்ணும் இல்ல இங்க நீ ஹாஸ்டல கட்ட வந்துட்டா உன்னால சரண்யாவை பார்த்துக்க முடியாது, 2 இடத்திலயும் அலையனும்ல அதை சொன்னேன் அதுக்காகதானே அவளை அனுப்பவிடறேங்கற”
“ஆமாம்”
என அவன் சொல்ல அதற்கு கைலாசமோ
”எதுக்குப்பா அதான் அவள் என் வீட்ல இருக்காளே நீயும் வந்துடு, ரெண்டு பேரும் தங்குங்க எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” என சொல்ல சரண் அதிர்ந்து போய்
”இல்லை இல்லை அது தாத்தாவை பார்க்கனும்னு அவள் சொன்னா அதான்” என்று சமாளித்தான்
”ஓ அப்படியா சரிப்பா நீ எப்ப என் வீட்டுக்கு வர்ற”
”என்னால ஓட்டல்ல தங்க முடியலை சாப்பாடு ஒத்துக்கலை, நான் நாளைக்கு இல்லை மறுநாள் தங்கச்சியை ஊருக்கு அனுப்பிட்டு வந்துடறேன்” என சொல்ல தேவா சிரித்துவிட்டு தாஸிடம்
”வாடா தாஸ் நாம கிளம்பலாம் சரண்யாவை வேற வீட்ல விடனும் வா ஓட்டலுக்குப் போலாம்” என சத்தமாக சொல்ல சரண் உடனே
”நீங்க ஓட்டலுக்கு போறீங்கன்னா நானும் வரேன்”
“இங்க மீட்டிங் இருக்குல்ல நீங்க மீட்டிங்கை முடிங்க நான் அவளை பார்த்துக்கறேன்“